ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் : நீதிமன்றில் மன்னிப்பு கோரிய பொலிஸார்

14

 

ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மூன்று பேரை கைது செய்யப்பட்டமை தொடர்பான உயர் நீதிமன்ற விசாரணையின் போது சிங்கள மரபுப்படி ஐந்து பொலிஸ் அதிகாரிகள் மன்னிப்பைக் கோரியுள்ளனர்.

சஹ்ரான் ஹாசிமின் நண்பர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று மனுதாரர்களிடம் ஹொரவ்பொத்தானை மற்றும் கெபித்திகொல்லேவ பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட ஐந்து பொலிஸ் அதிகாரிகள் பணிந்து மன்னிப்புக் கோரினர்.

மன்னிப்பு கோரல்
தாம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களின் விசாரணைக்கு இடையிலேயே இந்த மன்னிப்பு கோரல் இடம்பெற்றுள்ளது.

நீதியரசர்கள்; எஸ்.துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வின் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

SHARE