டக்ளசின் ஆயுதக் குழுவிடம் உள்ள ஆயுதங்களை பறிக்கவேண்டும்

458

images (1)

டக்ளசின் ஆயுதக் குழு தங்கியிருக்கும் வீடுகள், மற்றும் அவர்கள் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களையும் இராணுவமே தோண்டி எடுத்துவிட்டு அவை விடுதலைப் புலிகளின் ஆயுதம் என்று கூறிவருகிறது. இவ்வாறு நடக்க என்ன காரணம் ? டக்ளசுக்கும் கோட்டபாயவுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளது. இன் நிலையில், டக்ளஸ் அரசால் ஏன் ஓரங்கட்டப்படுகிறார் என்பது தெரியாத , அவரது ஆயுதக் குழு குழப்பத்தில்

இலங்கையின் வட பகுதியில் நிலைகொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஆயுதக்குழுவிற்கு, ஆப்புவைக்க கோட்டபாய திட்டம் தீட்டியுள்ளார் என்ற செய்திகள் கொழும்பில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வடக்கில் உள்ள டக்ளசின் ஆயுதக் குழுவிடம் உள்ள ஆயுதங்களை பறிக்கவேண்டும் என்றும், அப்படி அவர்கள் ஆயுதங்களை தர மறுத்தால் இராணுவத்தினர் அதனை செய்து முடிப்பார்கள், என்றும் பாதுகாப்பு செயலகம் தெரிவித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

இதன் காரணமாகவே டக்ளஸ் கும்பல் தமது ஆயுதங்கள் பலவற்றை இராணுவத்திடம் ஒப்படைத்து வருகிறது. ஆனால் அவற்றை நேரடியாக ஒப்படைக்க அவர்கள் விரும்பவில்லை. இதனால் புலிகளின் ஆயுதங்களை தாம் கண்டு பிடித்துள்ளோம் என்ற போர்வையில், இலங்கை இராணுவம் இந்த ஆயுதங்களை பறித்து வருகிறது என்று யாழில் இருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

SHARE