அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.
இதில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு டயகம வௌர்லி தோட்ட பகுதியில் வீடுகள் அற்ற நிலையில் உள்ளவர்களுக்கான 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளதோடு மொத்தமாக இப்பிரதேசத்தில் 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வேலையின் நிர்மாணத்துறைகள் செய்யப்படும்.
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தகுந்த இடத்தை குறித்த தோட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்டதுடன் மேற்படி இடத்தை தேசிய கட்டிட ஆய்வு நிறுவன அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
குறுகிய காலத்தில் இந்த வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன. குடிநீர், மின்சாரம் மட்டுமல்லாது வீதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.