டி.ஆர் திரையரங்க உரிமையாளர்களை மக்களுக்கு ஆதரவாக விளாசி எடுத்தர்…

334

தன் மனதில் தோன்றியதை அப்படியே பேசுபவர் டி.ராஜேந்தர் அவர்கள். இவர் நேற்று தயாரிப்பாளர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் மைக் பிடித்து என்னால் பேச முடியவில்லை, உடல் நிலை எனக்கு சரியில்லை, அதனால் நிறைய பேசமாட்டேன் என்று கூறி பேச ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து வழக்கம் போல் 6 நிமிடங்களுக்கு மேலாக பேசினார். இதில் இவர் பேசுகையில் ‘ஒரு படம் ஓடவில்லை மக்கள் தியேட்டர் வரவில்லை என்று சொல்கிறீர்களே, முதலில் ஒரு திரையரங்கின் டிக்கெட் எவ்வளவு தெரியுமா? பெரிய Multiplex திரையரங்கில் நம் தண்ணீர் பாட்டில் கூட கொண்டு செல்ல முடியாது.

கார் பார்க்கிங் குறைந்தது ரூ 60 , இப்படியிருக்க யார் சார் படம் பார்க்க தியேட்டருக்கு வருவாங்க, அதேபோல் நீங்களும் ஒரு படத்தை 100 நாள் கொண்டாடுகிறேன் என்று உங்கள் பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்யாதீர்கள்’ என வெளுத்து வாங்கி விட்டார்.

SHARE