டி20 தரவரிசை பட்டியலில் தினேஷ் கார்த்திக் சிங்க பாய்ச்சல்! கெத்து காட்டிய இலங்கையின் நிசாங்கா

11

 

சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் முதல் இடத்தில் உள்ளார். அதே அணியை சேர்ந்த ரிஷ்வான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஐடின் மார்க்ரம் உள்ளார். சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய வீரர் இஷான் கிஷன் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் இலங்கை அணி வீரர் நிசாங்கா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி நிலையில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 21 இடங்கள் (108-ல் இருந்து 87) முன்னேறி உள்ளார்.

SHARE