டி20 போட்டிகளில் அசத்துமா இலங்கை? கருத்து தெரிவித்த மலிங்கா

156
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றும் என்று அணித்தலைவர் மலிங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 30ம் திகதி நடக்கிறது. இதில் ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றும் என்று மலிங்கா தெரிவித்துள்ளார்.

மேலும், தெரிவு செய்யப்பட்டுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE