டெங்குத் தாக்க தீவிரத்தன்மையை கட்டுப்படுத்தும் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

105
(அபு அலா)
திருகோணமலை மாவட்டத்தில் டெங்குத் தாக்கத்தின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு நுளம்பு பரிசோதனை
நடவடிக்கைக்கள் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரனின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் அறிவுறுத்தல்களுக்கினங்க திருகோணமலை சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள எல்லாப் பிரதேசங்களிலும் டெங்கு நுளம்பு பரிசோதனை நடவடிக்கைக்கள் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தில் இன்று (23) காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பரிசோதனை நடவடிக்கைக்களின்போது, பல இடங்கள் பார்வையிடப்பட்டதுடன், டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், உயிரிழப்புகள் பற்றிய அறிவுருத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
SHARE