டெல்லியை சென்றடைந்தார் ரணில்: மோடி, முகர்ஜி, சுஸ்மாவுடன் சந்திப்பு

306

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா சென்றுள்ளார்.

இன்று மாலை டெல்லியைச் சென்றடைந்த ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜெனீவாவில் இன்று தொடங்கும் ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா.வின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணமும், நரேந்திர மோடியுடனான சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திய விஜயத்தின் போது, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் ரணில் சந்திக்கிறார்.

மோடி, சுஷ்மாவுடனான சந்திப்பின்போது, இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மாதம் பிரதமராக ரணில் பதவியேற்றப் பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

அவரது இந்திய விஜயத்தை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக அண்மையில் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE