டெல்லி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி: மீண்டும் வீழ்ந்த மும்பை

325
மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
8வது ஐ.பி.எல் தொடரின் 21வது போட்டியில் மும்பை இண்டியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மயான்க் அகர்வால் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

ஆனால் அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டூம்னி மற்றொரு தொடக்க வீரரான ஸ்ரீரியாஸ் ஐயருடன் இணைந்து அணியின் ஓட்டத்தை குவித்தார்.

156 ஓட்டங்கள் குவித்த போது ஸ்ரீரியாஸ் அரைசதம் கடந்து 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஏஞ்சலா மேத்யூஸ் 17 ஓட்டங்களிலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பி வரும் யுவராஜ் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் குவித்தது. டூம்னி ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து 78 ஓட்டங்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் மும்பை சார்பில் Mitchell McClenaghan 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 191 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் மட்டுமே குவித்து 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 28 ஓட்டங்களும், அணித்தலைவர் ரோகித் ஷர்மா 30 ஓட்டங்களும், அம்பதி ராயுடு 30 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் டெல்லி சார்பில் இம்ரான் தாகிர் 3 விக்கெட்டும், அமித் மிஸ்ரா, ஏஞ்சலா மேத்யூஸ் இருவரும் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக ஸ்ரீரியாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

 

SHARE