டெஸ்ட் போட்டியில் புதிய சாதனைகள் படைத்த கிறிஸ் றொஜயர்ஸ் ஓய்வு

168

லண்டன் : இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஆஷஸ் தொடரில், லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் (37 வயது) அறிவித்துள்ளார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து அணி 3-1 என முன்னிலை பெற்றதுடன் ஆஷஸ் தொடரையும் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்த படுதோல்வியால் ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் பதவி விலகியுள்ளதுடன், 5வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்சும் இதுவே தனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று நேற்று அறிவித்தார். கடந்த 2008ல் பெர்த் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான ரோஜர்ஸ் இதுவரை 24 டெஸ்டில் விளையாடி 1972 ரன் (அதிகம் 173, சராசரி 42.86, சதம் 5, அரை சதம் 14) குவித்துள்ளார். 

SHARE