தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவாகும் என அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் மில்லர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.
‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும். அதனை நிறைவேற்ற கடுமையாக உழைத்து வருகிறேன். எனது கனவு நனவாக சில காலம் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் அந்த வாய்ப்புக்காக தான் தயாராக காத்து இருப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 25 வயதான டேவிட் மில்லர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |