டைட்டானிக் கப்பல் விபத்து:உயிர் தப்பிய மில்வினா 95வருடங்களுக்கு பிறகு மரணம்- பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள், ஊழியர்கள் என 2,200-க்கும் அதிகமானோர் சென்ற கப்பலில் அவசர கால படகுகள் குறைவாக இருந்ததால், 710 பேர் மட்டுமே மீட்க முடிந்தது. 1500 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி பலியாயினர்.

688

டைட்டானிக் கப்பல் விபத்து: 100ஆம் ஆண்டு நிறைவு ஞாயற்று கிழமை தினம் அனுசரிப்பு

Tamil-Daily-News-Paper_33843195439 titanic_ship_007 titanic-ship-wrec titanic-sinking

மிதக்கும் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட டைட்டானிக் என்ற பயணிகள் கப்பல் கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கியது.
செர்பர்க், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் உள்ள குவினல் டவுன்(கோப்க்) வழியாக நியூயார்க்கை சென்றடைய போக்குவரத்து வழி வகுக்கப்பட்டிருந்தது.

அந்த கப்பலில் 28 நாடுகளை சேர்ந்த 1296 பயணிகள் இருந்தனர். அவர்களில் 416 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள், 112 பேர் குழந்தைகள், 13 தேனிலவு தம்பதிகள் இருந்தனர்.

இவர்கள் தவிர 918 கப்பல் ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 7 கண்காணிப்பு அதிகாரிகள், 23 பெண் என்ஜினீயர்கள், 28 ஆண் என்ஜினீயர்கள், 289 பாய்லர் மற்றும் என்ஜின்மேன்கள், 491 சர்வீஸ் ஊழியர்கள், 7 தச்சு தொழிலாளர்கள் அடங்குவர்.

சவுதாம்ப்டனில் இருந்து முதல் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது. 4 நாள் கழித்து அதாவது ஏப்ரல் 14ந் திகதி நள்ளிரவு 11.40 மணியளவில் டைட்டானிக் கப்பல் பனிப்பாறை மீது மோதியது.

இதனால் ஓட்டை விழுந்து கடல்நீர் கப்பலுக்குள் புகுந்தது. இதனால் கப்பல் மூழ்கத் தொடங்கியது. உடனே பயணிகள் உயிர்க்காக்க பயன்படுத்தும் சிறிய படகுகள் மூலம் கடலில் இறக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இருந்தும் 711 பேரை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடிந்தது.

ஏப்ரல் 15ந் திகதி அதிகாலை 2.20 மணிக்கு டைட்டானிக் கப்பல் முழுவதும் மூழ்கியது. மேலும் கப்பலில் இருந்த 1514 பேர் பலியாகினர். டைட்டானிக் கப்பல் மூழ்கி இன்றுடன் 113 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதைத் தொடர்ந்து அந்த கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்த சவுதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து ஒரு பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.

அதில் டைட்டானிக் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் உள்பட 1514 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

மிதக்கும் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட டைட்டானிக் என்ற பயணிகள் கப்பல் கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கியது.
செர்பர்க், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் உள்ள குவினல் டவுன்(கோப்க்) வழியாக நியூயார்க்கை சென்றடைய போக்குவரத்து வழி வகுக்கப்பட்டிருந்தது.

அந்த கப்பலில் 28 நாடுகளை சேர்ந்த 1296 பயணிகள் இருந்தனர். அவர்களில் 416 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள், 112 பேர் குழந்தைகள், 13 தேனிலவு தம்பதிகள் இருந்தனர்.

இவர்கள் தவிர 918 கப்பல் ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 7 கண்காணிப்பு அதிகாரிகள், 23 பெண் என்ஜினீயர்கள், 28 ஆண் என்ஜினீயர்கள், 289 பாய்லர் மற்றும் என்ஜின்மேன்கள், 491 சர்வீஸ் ஊழியர்கள், 7 தச்சு தொழிலாளர்கள் அடங்குவர்.

சவுதாம்ப்டனில் இருந்து முதல் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது. 4 நாள் கழித்து அதாவது ஏப்ரல் 14ந் திகதி நள்ளிரவு 11.40 மணியளவில் டைட்டானிக் கப்பல் பனிப்பாறை மீது மோதியது.

இதனால் ஓட்டை விழுந்து கடல்நீர் கப்பலுக்குள் புகுந்தது. இதனால் கப்பல் மூழ்கத் தொடங்கியது. உடனே பயணிகள் உயிர்க்காக்க பயன்படுத்தும் சிறிய படகுகள் மூலம் கடலில் இறக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். இருந்தும் 711 பேரை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடிந்தது.

ஏப்ரல் 15ந் திகதி அதிகாலை 2.20 மணிக்கு டைட்டானிக் கப்பல் முழுவதும் மூழ்கியது. மேலும் கப்பலில் இருந்த 1514 பேர் பலியாகினர். டைட்டானிக் கப்பல் மூழ்கி இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதைத் தொடர்ந்து அந்த கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்த சவுதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து ஒரு பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.

அதில் டைட்டானிக் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் உள்பட 1514 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

டைட்டானிக் கப்பல் விபத்து:உயிர் தப்பிய மில்வினா 95வருடங்களுக்கு பிறகு மரணம்
 
1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு டைட்டானிக் என்ற சொகுசு பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றது. இதில் 2,233 பயணிகள் இருந்தனர். 
 
கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தது. 15-ந்தேதி அதிகாலை நடுக்கடலில் சென்றபோது பனிக்கட்டில் மோதி கப்பல் மூழ்கியது.
 
இதில் பயணம் செய்த 1517 பேர் உயிர் இழந்தனர். 706 பேர் உயிர் தப்பி படகில் ஏறி உயிர் தப்பினார்கள். 
 
இந்த விபத்து உலகில் நடந்த பெரிய கோர விபத்தாக கருதப்பட்டது. 
 
1985-ம் ஆண்டு இந்த கப்பல் மூழ்கி கிடந்த இடத்தை கண்டுபிடித்தனர். டைட்டானிக் கப்பல் மூழ்கியதை மையமாக வைத்து டைட்டானிக் என்ற சினிமா படம் எடுக்கப்பட்டது. இது வெற்றிகரமாக ஓடியது. 
 
இந்த கப்பல் விபத்தில் உயிர் தப்பியவர்கள் அனைவரும் காலப்போக்கில் இறந்து விட்டனர். 
 
மில்வினா டீன் என்ற பெண் மட்டும் உயிருடன் இருந்தார். மில்வினா டீன் விபத்து நடந்தபோது 2 மாத கைக்குழந்தையாக இருந்தார். 
 
அவருடைய தந்தை வெர்ட்ரம், தாயார் ஜார்செட்டா, சகோதரர் வெல்ட் ஆகியோர் கப்பலில் பயணம் செய்தனர். விபத்தில் தந்தை இறந்து விட்டார். மற்ற 3 பேரும் படகில் ஏறி உயிர் தப்பினார்கள்.
 
மில்வினா டீன் இங்கிலாந்து சவுதாம்டன் நகரில் வசித்து வந்தனர். 97 வயதாகி விட்ட அவர் சமீப காலமாக உடல் நலம் சரி இல்லாமல் இருந்தார். முதுமை காரணமாக அவர் இறந்து விட்டார். 
 
கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். ஆஸ்பத்திரி பில் கட்ட கூட முடியாமல் தவித்த அவருக்கு டைட்டானிக் பட ஜோடி லியாண்டர்டோ காப்ரியோ, கேதே வின்ஸ்லட் ஆகியோர் பண உதவி செய்தனர்

வாஷிங்டன்: இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரலில் சென்ற ‘ஆர்எம்எஸ் டைட்டானிக்’ கப்பல் வடக்கு அட்லான்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள், ஊழியர்கள் என 2,200-க்கும் அதிகமானோர் சென்ற கப்பலில் அவசர கால படகுகள் குறைவாக இருந்ததால், 710 பேர் மட்டுமே மீட்க முடிந்தது. 1500 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி பலியாயினர். வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த இந்த சோக சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி டைட்டானிக் விபத்து தொடர்பான பல தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் அறிவியல் கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கார்பீல்டு கூறியிருப்பதாவது:

உலோகவியல் (மெட்டாலர்ஜி)  துறையில் அதிக அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்கள் டிம் போக், ஜெனிபர் ஹூப்பர் மெக்கர்ட்டி ஆகியோர் உடைந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை ஆராய்ச்சி செய்தனர். அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லண்ட் உல்ஃப் தளத்தில்தான் டைட்டானிக் கப்பல் 1909-11ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அங்கு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கப்பலின் அடிப்பகுதியை கோர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ‘ரிவிட்’ (ஆணி) தரமானதாக இல்லை என்று தெரியவந்திருக்கிறது. அந்த ரிவிட்கள் சரியாக வார்க்கப்படவில்லை. 

அவற்றை ஒழுங்கின்றி அடித்து கப்பலை கோர்த்துள்ளனர் என்றும் தெரியவந்தது. இதனால், கப்பலின் ஒரு பகுதி மற்ற பகுதிகளை விட உறுதித் தன்மை குறைவாக இருந்திருக்கிறது. அந்த பகுதி பனிப் பாறையில் இடித்ததும் உடைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது. செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற ஆணிகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தியதே படுபயங்கர விபத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிட்டது. ஆக, எப்படி தயாரித்தால் கப்பல் உறுதியாக இருக்கும் என்ற கணக்கில் கோட்டை விட்டிருக்கின்றனர்.

அடுத்ததாக, வெப்ப மாற்றம். 1912-ல் கரீபியன் கடல் பகுதியில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் காணப்பட்டது. இதனால், கடலுக்குள் நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருந்திருக்கிறது. லேப்ரடார் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட பனிப் பாறைகள் திரண்டு தடையை ஏற்படுத்தியிருக்கின்றன. லேப்ரடார் நீரோட்டமும் வடக்கு அட்லான்டிக் வளைகுடா நீரோட்டமும் இணைகிற இடத்தில் பனிப் பாறையில் மோதி டைட்டானிக் விபத்துக்குள்ளானது. கடலில் ஏற்பட்டிருந்த இயற்பியல் மாற்றங்களும் துரதிர்ஷ்டவசமாக கப்பல் விபத்துக்கு காரணமாகிவிட்டது. இவ்வாறு ரிச்சர்ட் கூறியுள்ளார்.

‘3டியில் மாறிய நட்சத்திரம்’

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ல் வெளியான படம் ‘டைட்டானிக்’ கப்பல் விபத்தை சித்தரித்து பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை குவித்து சாதனை படைத்தது. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்படம் இன்று ரிலீசாகிறது. டைட்டானிக் (1997) படம் வெளிவந்த பிறகு, நீல் டிகிராஸ் டைசன் என்ற வானியல் நிபுணர் ஒருவர் கேமரூனுக்கு ஒரு இமெயில் அனுப்பியிருந்தார். 

‘படத்தின் நாயகி கேத் வின்ஸ்லெட் வானில் இருக்கும் நட்சத்திரங்களை ரசிப்பது போல ஒரு காட்சி அமைத்திருக்கிறீர்கள். ஆனால், 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி நட்சத்திரங்கள் அந்த பொசிஷனில் இருக்கவில்லை. எல்லாவற்றையும் மிக துல்லியமாக கவனித்து செய்யும் கேமரூன் இந்த சாதாரண தவறைக்கூட செய்திருக்க கூடாது’ என அதில் கூறியிருந்தார். இதை கருத்தில் கொண்டு, சம்பவம் நடந்த போது நட்சத்திரங்கள் எப்படி இருந்ததோ, அச்சு அசலாக அதே போலவே 3டி படத்தில் மாற்றம் செய்திருப்பதாக கேமரூன் கூறியுள்ளார்.

SHARE