டோனி, ரோஹித்தை சீண்டிய வங்கதேச வீரர் ரஹ்மான்

171
மிர்புரில் நடந்த நேற்றைய ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச பந்துவீச்சாளர் ரஹ்மான் இந்திய அணித்தலைவர் டோனி, ரோஹித் சர்மாவை சீண்டினார்.இந்தியா துடுப்பெடுத்தாடும் போது 4வது ஓவரை ரஹ்மான் வீசினார். இதில் ஒரு ஓட்டம் எடுக்க ரோஹித் ஓடும் போது ரஹ்மான் குறுக்கே வர, இருவரும் மோதினர். இதைத் தொடர்ந்து ரஹ்மானை பார்த்து ரோஹித் விரலை நீட்டி எச்சரித்தார்.

இந்நிலையில் நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதனப்படுத்தினார். அதே போல் 24.2வது ஓவரில் டோனி ஓட்டங்கள் எடுக்க முயன்ற போதும் ரஹ்மான் இதே போல் செய்தார்.

இந்த முறை டோனியுடன் மோதியதில் ரஹ்மான் கீழே விழுந்து களத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அணித்தலைவர் டோனி நடுவரிடம் இதைப் பற்றி புகார் அளித்தார்.

SHARE