ட்ரோன் விமானங்களை பறக்கவிடுவதற்கு புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யும் பிரித்தானியா!

266

சிறிய ரக விமானமான ட்ரோனை பயன்படுத்தி பல்வேறு நன்மை பயக்கும் செயற்பாடுகள் சமகாலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இருந்தும் பாதகமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படத்தான் செய்கின்றன.

இவ்வாறான அச்சுறுத்தல்களில் இருந்து முற்பாதுகாப்பினை செய்துகொள்வதற்காக பிரித்தானியா ட்ரோன் விமானங்கள் தொடர்பில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி 250 கிராம் எடைக்கு அதிகமான ட்ரோன் விமானங்கள் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

அத்துடன் பிரித்தானியாவின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.

400 அடிகள் உயரத்திற்கும் குறைவாகவே பறப்பில் ஈடுபடச் செய்ய வேண்டும்.

பறக்கும் ட்ரோன் எப்போதும் அதன் உரிமையாளரின் பார்வையிலேயே இருக்க வேண்டும்.

மக்கள் மற்றும் உடமைகளில் இருந்து சரியான தூரத்தில் பறக்கவிடச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பறப்பிற்கும் உரிமையாளர்களே பொறுப்பு கூற வேண்டும். விமானங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றிலிருந்து அப்பால் பறக்கச் செய்ய வேண்டும்.

போன்ற விதிமுறைகளையே அறிமுகம் செய்துள்ளது. இந்த விதிமுறைகள் ஐக்கிய இராச்சிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE