தங்கையை கார் மோதி கொலை செய்து நேரலை செய்த சகோதரி

229

அமெரிக்காவில் தங்கையை கார் மோதி கொலை செய்து சகோதரி, அதை நேரலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் பனோஸ் பகுதியில் குறித்த கொடூர செயல் நடந்துள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட அப்துலியா சான்செஸ்(18) தமது தங்கை இறந்துவிட்டார், இதுவே எங்களுக்குள் ஏற்படும் கடைசி நிகழ்வாக இருக்கும் என ஆசைப்பட்டேன், ஆனால் அது இப்போதே நடந்துவிட்டது என இன்ஸ்டாகிராம் நேரலையில் கத்திப் பேசியுள்ளார்.

உயிரிழந்த ஜாக்குலின் சான்சேஸ்(14) சம்பவத்தின்போது அந்த வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து வந்துள்ளார்.

ஆனால் அப்துலியா போதை மருந்து பயன்படுத்தியிருந்ததால் வாகனத்தை மிக வேகமாகவும் கண்மூடித்தனமாகவும் செலுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

வீடியோவை காண

இதில் உரிய பாதுகாப்பு இன்றி அமர்ந்திருந்த ஜாக்குலின் வாகனத்தில் இருந்து வெளியே வீசப்பட்டுள்ளார். ஆனால் இது தெரியாத அவரின் சகோதரி பலமுறை வாகனத்தை அவரின் மீது மோதவிட்டுள்ளார்.

இதில் அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை நேரலை செய்துள்ள அப்துலியா, கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை என்றும், ஆனாலும் நிம்மதியாக தூங்கு என இறுதியாக தெரிவித்துள்ளார்.

ஜாக்குலினுடன் அந்த வாகனத்தில் பயணித்த இன்னொரு இளைஞரும் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் அப்துலியாவை கைது செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

SHARE