தசைப் பிடிப்பு: சிகிச்சை பெற்றார் கமல்

390

தசைப் பிடிப்பு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார்.

நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை மாலை தனியார் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சிக்குச் செல்லும் முன்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.

பொது மருத்துவர் ஜே.ஆர்.சுப்பிரமணியனைச் சந்தித்து தசைப் பிடிப்புக்கு பரிந்துரையைப் பெற்ற அவர் பின்பு அங்கிருந்து கிளம்பி விருது வழங்கும் நிகழ்ச்சிக்குச் சென்றார்.

சென்னையில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படப் பிடிப்பு நடைபெற்று வருகிறது.

SHARE