தடைகளை தாண்டி வாலு

240

சிம்பு நடிப்பில் உருவான வாலு படம் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. இன்று சில திரையரங்குகளில் காலை 8 மணிக்கு இப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், காலை 8 மணிக்கு வாலு படத்தை திரையிடுவதற்கான உரிமம் வழங்கப்படவில்லை என்று திரையரங்கில் இப்படம் திரையிடப்படவில்லை. சென்னை காசி திரையரங்கில் இப்படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக சிம்பு சரியாக 8.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். அவர் வந்து நீண்ட நேரமாகியும் வாலு படத்திற்கான உரிமம் வழங்கப்படாமலே இருந்தது.

கடைசியில் ஒருவழியாக 10.00 மணிக்கு ‘வாலு’ படத்திற்கான திரையரங்கு வெளியீட்டு உரிமம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கிடைத்தது. இதன்பிறகு படத்தை திரையரங்குகளில் வெளியிட்டனர்.

இன்று வெளியான இப்படத்தை கொண்டாடுவதற்காக அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கூடிவிட்டனர். கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வது, பாட்டு பாடி கொண்டாடுவது என தியேட்டரே அல்லோகலப்பட்டது.

காசி திரையரங்கில் திரையிடப்படவிருந்த சிறப்பு காட்சிக்கு சிம்புவுடன், நடிகர் ஜெய், சூரி, ரோபோ சங்கர், இயக்குனர் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE