தணிக்கை குழுவில் ஆள்பற்றாக்குறை: தேங்கி நிற்கும் படங்கள்!

445

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசின் தணிக்கை குழுவின் தமிழ்நாட்டு பிரிவில் கடும் ஆள்பற்றாக்குறை உள்ளது. இதனால் படங்கள் தணிக்கைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறது. ஆள் பற்றாக்குறையால் படங்கள் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு அறிவிக்கப்பட்ட தேதியிலும் படங்களை வெளியிட முடியவில்லை. சரபம் படம் வருகிற 11ந் தேதி வெளிவருவதாக இருந்தது. படம் தணிக்கைக்கு காத்திருப்பதால் தள்ளிப்போகிறது. இது தவிர மெட்ராஸ் உள்பட 15 படங்கள் தணிக்கைக்காக காத்திருக்கிறது.
தணிக்கை குழுவில் குறைந்த பட்சம் 12 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஒரு படத்தை 2 பெண்கள், 2 ஆண்கள் ஒரு தணிக்கை குழு அதிகாரி என 5 பேர் பார்க்க வேண்டும். தற்போது தணிக்கை குழுவில் 5 பேர் மட்டுமே உள்ளனர். அவற்றில் 2 பேர் மட்டுமே பெண்கள். எனவே இவர்கள் தினம் ஒரு படம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அண்டை மாநிலங்களில் இருந்து தணிக்கை குழுவினரை அழைத்து வரலாம். ஆனால் அவர்களுக்கான போக்குவரத்து செலவு தங்குகிற செலவை யார் ஏற்பது என்கிற சிக்கல் இருக்கிறது.
SHARE