தனக்கு சொந்தமான காணியை வழங்ககோரி முதியவர் கூரையின் மேல் ஏறி போராட்டம்.

165

 

தனக்கு சொந்தமான காணியை வழங்ககோரி முதியவர் கூரையின் மேல் ஏறி

போராட்டம்.

unnamed (1) unnamed

தனக்கு சொந்தமான காணியை தன்னிடம் வழங்குமாறு கோரி முதியவர் ஒருவர்

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் கூரையின் மேல் ஏறி போராட்டத்தில்

ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட வேவத்தெக விக்கிரமசூரிய என்பவர்

தெரிவிக்கையில்,

வவுனியா, நெடுக்குளம், மினிமறிச்சகுளம் பகுதியில் எனது தந்தைக்கு ஒரு ஏக்கர்

வயல்காணி இருக்கிறது. அந்த காணி அவருக்கு பின் எனக்கு என உறுதியில்

எழுதப்பட்டுள்ளது. எனது அக் காணிக்குரிய ஆவணங்கள் என்னிடம் உள்ள போதும்

அதனை வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தினர் வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளனர்.

எனவே எனது காணியை மீட்டுத் தருமாறே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக

தெரிவித்தார்.

SHARE