2023 ஆண்டிற்கான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது சிறந்த ODI பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருதை முகமது சிராஜ் வென்றுள்ளார்.
இந்திய கிரிக்கட் அணி வீரரான சிராஜ் பெற்றுக்கொண்ட தனது பரிசுத் தொகையை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் தனது துணிச்சலான செயற்பாட்டிற்காக சிராஜ் $5000 பெற்றுள்ளார்.
இதில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எட்டாவது ஆசியக் கோப்பையை ஆர் பிரேமதாச மைதானத்தில் வென்றது.
இலங்கை தலைநகரில் பெய்த மழையால், நடைப்பெற்ற கான்டினென்டல் போட்டியில் விளையாட்டுகளை ஒன்றாக இணைத்ததற்காக மைதான ஊழியர்களுக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விருது வழங்கியது.