தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் இன்றோடு 100வது நாளை எட்டியிருக்கிறது. ..

379

ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், ”வேலையில்லா பட்டதாரி” படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தனுஷ், அமலாபால், சுரபி, சரண்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது. தனுஷூக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படம் இன்றோடு 100வது நாளை எட்டியிருக்கிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குநரான வேல்ராஜ் கூறுகையில், இப்படத்தை நான் இயக்க காரணமே முழுக்க முழுக்க தனுஷ் தான். அவரால் தான் நான் இயக்குநரானேன். இப்படம் 100வது நாளை எட்டியிருப்பது சந்தோஷம். இதற்காக தனுஷூக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது நான் கொம்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறேன். வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷூடன் ஒரு படத்தில் இணைய இருக்கிறேன். அவருடன் இணைவது சந்தோஷம். வேலையில்லா பட்டதாரி படத்தை காட்டிலும் இந்தப்படத்திற்கு இன்னும் அதிகமாக உழைக்க காத்திருக்கிறேன் என்றார்.

 

SHARE