தன்னையும் சகோதனையும் சரத்பொன்சேகாவிடமிருந்து பாதுகாக்குமாறு ரணில்விக்கிரமசிங்கவிடம் மஹிந்தராஜபக்ஷ மன்றாடிக் கேட்டுக்கொண்டதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அலரிமாளிகையிலிருந்து வெளியேறும் முன்னர், ரணிலை அழைத்து பேசியபோது, சரத் பொன்சேகாவிடமிருந்து தன்னையும் குடும்பத்தாரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகைக்கு மகிந்த அழைத்திருந்தார். அங்கு ரணில் சென்றபோது, பிரதம நீதியரசர் மொஹான் பீரிசும் மகிந்தவுடன் இருந்திருக்கிறார். அதுதவிர, லலித் வீரதுங்க, கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.
சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவப்படையணியொன்றை உருவாக்கி வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையில் மகிந்தவையம் சகோதரர்களையும் கைது செய்வோம் என சந்திரிகா அண்மையில் கூறியதாக மகிந்த தெரிவித்துள்ளார். தனக்கோ தனது சகோதரர்களிற்கோ பிரச்சனை தர மாட்டீர்களா என கேட்டுள்ளார். இந்த சமயத்தில் ரணில் மெல்லிய மிரட்டல் ஒன்று கொடுத்துள்ளார். சுமுகமான ஆட்சிமாற்றமொன்று நிகழ வழியேற்படுத்தினீர்களெனில், அவ்வாறான பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்வதாக கூறியிருககிறார்.
இதன்பின்னர், சரத் பொன்சோகவிடமிருந்து வரும் ஆபத்துக்கள் குறித்து பேசியிருக்கிறார். சரத்தினால் தனக்கோ, கோத்தாவிற்கோ எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வெண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அது தவிர, கொம்பனி தெரு ஜெகில்டனிற்கு எதிராக உள்ள அக்லான்ட் ஹவுசை தனது பாவனைக்கு தருமாறு மகிந்த கேட்டுள்ளார். அது பாதுகாப்பான இடமென்றும், புலிகளை அழித்ததால் தனக்கு ஆபத்துள்ளதாகவும் கூறினார். மகிந்தவின் இந்த கோரிக்கையை சிறிசேனவிடம் கூறியபோது, அவர் உடனடியாகவே அதை மறுத்துவிட்டார். அந்த இடத்தை தான் பயன்படுத்தப் போவதாக சிறிசேன கூறிவிட்டார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.