ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவா, மைத்திரியா என போட்டிகள் நிலவும் அதேநேரம் தமிழ் மக்களைவிட முஸ்லீம் மக்களையே ஆதரித்து அமைச்சுப்பொறுப்புக்களை வழங்கி, தமது கைக்கூலியாகவும், நட்புறவாகவும் வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று அவர்களாலேயே தூக்கியெற்pந்துள்ளனர். தனது கட்சியில் இருந்து வெளியேறிய முஸ்லீம் அரசியல்வாதிகளை நான் கணக்கெடுக்கமாட்டேன் என அவர் தெரிவித்திருக்கின்றார். இதுவரை நான்கு பள்ளிவாசல்கள் பொதுபலசேனாவினை வைத்து உடைக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை மஹிந்த அவர்கள் ஆட்சிக்குவந்தால் எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்படும் என்பது தெரியாது என்ற கருத்துப்படவே அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.