தமன்னா த்ரிஷாவை ஃபாலோ செய்யபோவதாக திட்டமிட்டுள்ளாராம்.

375

தெ
லுங்குவில் மகேஷ்பாபுவுடன் தமன்னா நடித்த ஆகடு படம் வெற்றி பெறாததால் தற்போது படத்தயாரிப்பாளர்கள் தமன்னா இருக்கும் பக்கம் செல்வதே இல்லையாம். தமிழில் தற்போது உதயநிதி, நயன்தாரா ஜோடியாக  நடித்து வரும் நண்பேண்டா படத்தில் ஒரு கெஸ்ட்ரோல் மட்டும் நடித்துக் கொடுத்துள்ள தமன்னாவிற்கு கைவசம் எந்த புதிய படங்களும் இல்லையாம்.  ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ள ஒரு படம்மட்டும்தான் அவர் வசம் இருந்தாலும் அந்தப் பட வேலைகள் தொடங்கப்படாமல் தள்ளிப் போய்கொண்டே  இருக்கிறதாம், ஒருவேளை அடுத்த மாதம் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கப்படவில்லையென்றால் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு டூர் செல்ல திட்டமிட்டுள்ளதோடு, டூர் முடிந்து திரும்பவந்தவுடன், தனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில் த்ரிஷாவை போன்று கன்னட சினிமாவில் தனது முழுகவனத்தையும்  செலுத்தி கன்னட திரையுலக முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளாராம்.
SHARE