2015இற்கான ஜனாதிபதித் தேர்தல் சுமுகமான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆங்காங்கே ஒருசில அசம்பாவிதங்கள் இடம்பெற்றாலும் மக்கள் ஆட்சிமாற்றம் தேவை என்பதற்காக உற்சாகமாக வாக்களிப்பதனைக் காணக்கூடியதாகவிருந்தது. அரியாலையில் ஒரு கைக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. இதில் மூவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது எனினும் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. நிச்சயமாக இத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெறுவார் என்றும் தமிழ் பேசும் மக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது இத்தேர்தலின் மூலம் தெரிகின்றது.
போலியான துண்டுப்பிரசுரங்களின் மூலம் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்கவேண்டாம் என வழங்கப்பட்டபோதிலும் இவை யாருடைய நாசகாலவேலை என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறியதற்கமைய, வடபகுதியில் வாக்களிப்புக்கள் சிறந்த முறையில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.