தமிழரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்-தமிழ் தேசிய இளையோர் அமைப்பு

348

 


எங்கள் ஊர் பாட்டன்
இப்படித்தான் சொன்னான்
“தம்பி”
பேரளவில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஆனால்
1422573_1652773794951289_2061907282628443191_n

கொள்கைகள் கருத்துக்களில்
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமடா தம்பி.
அது மட்டுமல்ல மாகாணசபை உறுப்பினர்களும்
அப்படியே தான்.
சம்பந்தன் சுமந்திரன் ஒரு கருத்து
சுரேஸ்பிரேமச்சந்திரன் இன்னோர்கருத்து
பிள்ள ஆனந்தி ‘சிவாஜிலிங்கம் மற்றுமோர்கருத்து
மன்னாரில் டொனீஸ்வரன் தனித்த முடிவு
ஆரோகரா தம்பி விக்கினேஸ்வரன்
எல்லாத்தையும் சொல்லுறான்ரா..
“”இதல்லாத்தையும் கேட்டால் ஒரே தலையிடியடா ..
என்றவர் இன்னும் சொல்லிக்கொண்டிருந்தார்..
தம்பி ராசா..
ஒரு தலைமையின் கீழ்
ஒரே கருத்தோட ஒரே கொள்கையோட
தமிழர்நாம் பயணித்தால் தான்
எங்கட உரிமையை பெறலாம்.
இப்படியான கோமாளித்தன அரசியலை
பார்க்க இரத்தம் கொதிக்குதடா
மண்ணுக்குள் உறங்கும்
தியாகிகளை நினைத்தாவது
இவங்களெல்லாம் ஒன்றாகி
தமிழர் உரிமையை பெற பாடுபட வேணுமடா தம்பி..
என்றான் என் பாட்டன் தளதழத்த குரலுடன்.
 

 

SHARE