தமிழர் கலை, கலாச்சாரம் தொடர்பில் விழிப்புணர்வு அவசியமானது.

189

 

தமிழகம், இலங்கை உட்பட உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் மொத்த எண்ணிக்கையிலும் பார்க்க மிகக்குறைந்த எண்ணிக்கையைக்கொண்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனையோ இணக்குழுமங்களுக்குத் தமக்கெனத் தனிநாடுகளும் சுயாட்சிகளும் இருக்கும்போது தமிழருக்கென ஒரு தனி நாடோ சுயாட்சியோ இல்லாமல்போனது அவ்வினத்தின் துரதிட்டம் என்றுதான் கொள்ளவேண்டும்.

25025

இதனால்தான் காந்தியாரின் பாரத சுதந்திரப்போரின்போது தமிழகத்தில் இருந்து பங்குபற்றிய ஏறக்குறையச் சமவயதினரான மூதறிஞர் இராஜாஜி அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் பிரித்தானியரின் சிறைச்சாலையில் ஒன்றாகவிருந்து வாடியபோதும் பின்னாளில் பாரதத்துக்குச் சுதந்திரம் கிடைத்த பின் இவ்விரு நண்பர்களும் இருவேறுபட்ட துருவங்களாக மாறி முன்னவர் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்திச் சுதந்திராக்கட்சி என்னும் கட்சியை ஆரம்பித்துத் தமிழகத்தின் கவர்னராகவும் பதவி வகித்தார். பின்னவர் பெரியார் அவர்கள் தமிழர்கள், மலை யாளிகள், தெலுங்கு தேசத்தவர் ஆகிய முப்பிரிவினர்களையும் உள்ளடக்கிய திராவிட இனத்தவர்களின் இழிநிலைகண்டு கொதித்தெழுந்ததோடு அவ்வினத்தவர்களுக்குள் மேட்டுக் குடியினராக வாழ்ந்துகொண்டிருந்த வைதீகப் பிராமணர்களினதும், மதத்தை முகமூடியாகக்கொண்டும் கடவு ளரைப் பாதுகாப்புச் கவசங்களாகக் கொண்டும் டில்லியின் உள்ளுர் ஆதிக்க சக்திகளின் அனுசரணையோடு தமிழகத்துக்குள் கட்டவிழ்த்து விட்டபகுத்தறிவுக் கொவ்வாத மூடத்தனங்களையும், மந்திரமாயா ஜாலங்களையும், பாலியல் வக்கிரங் களையும், அசாதாரணமான உழைப்புச் சுரண்டலையும் கடுமையாகச் சாடிய ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் பிராமண ஆதிக்கத்தின் வரம்புமீறலைப் பிரதா னமான கருப்பொருளாகக்கொண்டு முதலில் சுயமரியாதை இயக்கம் என்னும் பகுத்தறிவு சார்ந்த அமைப்பை உருவாக்கிப் பின்னாளில் அவ்வமைப்பைத் திராவிடர் கழகம் என்னும் பெயரில் அரசி யல் கட்சியாக மாற்றினார். இக்கட்சிக் கொடியின் நிறம் கறுப்பாக பெரியார் அவர்களினால் ஆக்கப்பட்டதிலிருந்தே அவருடைய விசித்திரமான-விநோதமான மனோபாவத்தைப் புரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல. தமிழரை மிகப் பெரும்பான்மையினராக உள்ளடக்கிய உலகளாவிய திராவிட இனத்தின் அடிமைநிலைகண்டு அகமிக வருந்தி அவ்வினத்திற்கான ஒரு சுயாட்சி மிக்க தனிநாடு தேவையென்பதை உணர்ந்து திராவிட நாடு என்னும் கோரிக்கையை முன்வைத்தார். இவரு டைய அரசியலின்பாற்பட்ட ஈர்ப்பினால் அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் கவரப்பட்டு அன்னாரோடு ஆரம்பத்தில் இணைந்து வேலை செய்தபோதும் பின்னர் பிரிந்து திராவிடர் முன்னேற்றக்கழகம் என்னும் அமைப்பை உருவாக்கிப் பெரியார் அவர்களால் முன்வைக்கப்பட்டதிராவிட நாடு கோரிக்கையை ஆரம்பத்திலும் பின்னர் தமிழ்நாடு என்னும் கோரிக்கையையும் முன்வைத்தார். தமி ழர் சுயமரியாதை, கலை, கலாச்சாரம் தொடர்பில் விழிப்புணர்வின் அவசியம் முதன்முதலாகத் தந்தை பெரியார் அவர்களினாலேயே அரசியல் ரீதி யாக உணரப்பட்டிருந்தது. பெரியாரின் இவ்வுணர்வினால் கவரப்பட்டு அவரைப் பின்தொடர்ந்து அறிஞர் அண்ணா அவர்கள் அவரைவிடப் பலமடங்கு வீச்சோடு பின்னாளில் தமிழர் சுயமரி யாதை, கலை, கலாச்சாரம் தொடர்பிலான விழிப்புணர்வின் அவசியம் பற்றி எழுதி யும் பேசியும் வந்ததோடு அரசியல் ரீதியா கவும் அவ்விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளதோடு அதற்கான தனது அரசியல் பணிகளையும் அயராது மேற்கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறாகத் தமிழர் கலை, கலாச்சாரம் தொடர்பிலான விழிப்புணர்வின் அவசியம் பற்றி அரசியல் ரீதியாக ஈ.வெ.ரா.பெரியார் அவர்களினால் முதன்முதலாக வலியுறுத்தப்படத், தொடர்ந்து அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி முதலானோரால் அவ்வலியுறுத்தல் மெருகூட்டப்பட்டுக்கொண்டே வந்தது. இதன் தாக்கம் இலங்கைத் தமிழ் மக்களுக்குள்ளும் தமிழர் கலை, கலாச்சாரம் தொடர்பிலான விழிப்புணர்வின் அவசியம் வேண்டற்பாலது என்னும் சிந்தனையைத் தோற்றுவித்தது.

தமிழ்மக்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்தபோதும், அவர்களுக்கெனத் தன்னாதிக்கம், இறைமை, சுயநிர்ணயம், சுயாட்சி என்பன எந்த நாட்டிலுமே இல்லாத நிலையில் அவர்களால் தொன்;றுதொட்டு பேணப்பட்டு வந்த கலை, கலாச்சார விழுமியங்களும் பேணப்பட்டு பாதுகாக்கப்படாமல் அம்மக்களின் தனித்துவம் சிதைக்கப்படுவதோடு மற்றைய இனங்களுக்குள் அமைந்திராத அளவில் சிந்தனையாளர்கள், சித்தர்கள், ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோர் பெருமளவில் தமிழர்களுக்குள் குறிப்பாகத் தமிழகத்தில் தோன்றியிருந்தமையும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகி யோர் அவதரித்திருந்தமையும் அபாரமான ஆற்றல்மிக்க கலைஞர்கள் அவர்களுக்குள் வாழ்ந்தமையும் தமிழர் கலை, கலாச்சாரம் தொடர்பிலான விழிப்புணர்வு எந்தளவுக்கு அவசியமானதொன்றாக விளங்குகின்றதென்பதற்கு ஆதார சுருதிகளாக விளங்குகின்றன. தமி ழர் கலை, கலாச்சாரம் தொடர்பில் விழிப்புணர்வின்றி ஏனோதானோ என இருப்பதோடு மட்டுமல்லாமல் பிற இனத்தவர்களின் கலை, கலாச்சாரம் தொடர்பில் ஈடுபாடுகொண்டு அவற்றின்பால் ஈர்க்கப்பட்டுச் செல்வதாலும் தமிழர்களுக்குள் வாழ்ந்து மடிந்த தலைசிறந்த சிந்தனையாளர்கள், சித்தர்கள், ஞானிகள், காப்பிய கர்த்தாக்கள் ஆகியோரைப்பற்றி வருங்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ளமுடியாத நிலையையும், அவர்களுடைய அருமருந்தன்ன திராவிடர் தமிழர் நலன்பேணும் ஆக்கங்கள் அனைத்தும் அம்மக்களின் தனிச்சிறப்புக்களையெல்லாம் விலா வாரியாக எடுத்தியம்பும் இலக்கிய ஓவியங்கள் சகலவையும் பூண்டோடு அழிந்தொழிவதோடு தொன்றுதொட்டு இருந்துவரும் உலகையே உவகையில் ஆழ்த்திய தமிழர் கலை, கலாச்சாரம் அகிலந் தழுவியளவில் மங்கி மடிவதற்கும் வழிவகுக்கும்.

திராவிடர்கழகத் தலைவர் பெரியார் அவர்கள் திராவிடர் -தமிழர் நலன்சார்ந்த கலை, கலாச்சார விழிப்புணர்வின் அவசியத் தன்மையை-அவர்களுடைய ஆடை, அணிகலன்களோடும் கிராமிய மட்டத்தில் இடம்பெறும் கலைநிகழ்ச்சிகளோடும் மட்டும் வரையறைக்குட்படுத்தாமல் குடும்ப ஆரோக்கியத்துக்கும், சமூக சௌக்கியத்துக்கும் சாதகமாக வலியுறுத்தினார். அன்னார் குடும்பப் பிரிவினைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், பெண் அடக்குமுறை, பெண்ணை வெறும் சிற்றின்பப் பொம்மையாக கருதும் பிற்போக்குத்தனம், சமஸ்கிருத மொழி சார்ந்த இந்து மதக் கிரியைகள் அனைத்தையும் ஆரியர் தமது திராவிடர்-தமிழர் மீதான அடக்குமுறை ஆட்சியைக் கச்சிதமாகக் கையாள்வதற்கான சூழ்ச்சிகளும், சதித்திட்டங்களுமே என வர்ணித்தார். அவர் அக்காலத்தையத் தமிழ்ச் சினிமாக்களையே கலாச்சாரச் சீரழிவுக்கு வித்திடுக்கின்றன என வர்ணித்தவர் எனின் இக்காலத் தமிழ்ச் சினிமாக்களை அவரையொத்த கண்கொண்டு நோக்குபவர்களுக்கு அச்சினிமாக்கள் எந்தளவு வீச்சுடன் கலாச்சாரச் சீரழிவுக்கு வித்திடுகின்றன என்பது தெளிவாகப் புரியும். இன்றைய தமிழர் கலைப் படைப்புக்கள், மேற்கத்தையப் பாணியைக்கைக்கொண்டு அதன் வழி நின்றும், தமிழர் கலை மரபுகளைப் பேணி யும் வெளிக்கொணரப்படுவதால் தமிழ் மரபு சார்ந்த மனிதந்தழுவிய கலைவெளிப்பாடுகளைத் திரிவு படுத்தியும் இரண்டுங்கெட்டான் நிலையில் காணப்படுகின்றன. இந்த இரண்டுங்கெட்டான் நிலை தமிழர்களைக் குறிப்பாக இளையோரைத் தமது மரபுசார்ந்த கலை வெளிப்பாடுகள் எவை யெனத் தெரிந்துகொள்ளமுடியாத நிலை யில் திணறடிக்கச் செய்கின்றன. இதனால் தற்போது தமிழர் மரபுசார்ந்த கலை வெளிப்பாடுகளும் அதன் குறியீடுகளும் திசைமாறிச் செல்வதோடு மங்குமறையவுஞ் செய்கின்றன.
வெறும் கேளிக்கை ஆட்டங்களும் அர்த்தமற்ற அநாகரிகமான கலை வெளிப்பாடுகளும், சினிமா உட்பட அனைத்துக் கலை ஊடகங்களையும் இன்று நிறைத்து நிற்கின்றன. இன்றைய சினிமாக்களின் கதையோட்டங்களும், காட்சி வெளிப்பாடுகளும், பாடல்களும் தொன்றுதொட்டு இருந்துவரும் தமி ழர் கலை வெளிப்பாடுகளுக்கு முரணா கவும், பண்பாட்டு விழுமியங்களுக்கு மாறாகவும், பெண்கள் தொடர்பான உயரிய இடத்தையும், ஆண்கள் தொடர்பில் பெண்கள் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் மிகவும் மரியாதை மிகுந்த அணுகுமுறைகளைச் சிதைப்பனவாகவும் பிஞ்சு உள்ளங்களில் மரபுசார் தமிழர் கலை வெளிப்பாடுகள் சார்ந்த ஆரோக்கியமற்ற விதைகளை விதைப்பனவாகவும் விளங்குகின்றன.

மேலும் உள்ளூர் மட்டங் களில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளும் இப்பாணியைப் பின்பற்றியே பெருமளவில் மக்கள் நுகர்வுக்கு ஆட்படுத்தப்படுகின்றன. அத்தோடு உள்ளுரில் தயாரிக்கப்படும் குறும்படங்களும் இத்தன்மை வாய்ந்தவைகளாகவே காணப்படுகின்றன. தமிழரின் வழிபாட்டுத் தலங்களான சைவத் தலங்களிலும் கிறிஸ்தவத் தேவாலயங்களிலும் கூடப் பாலியல் வக்கிர உணர்வுகளைத் தூண்டி விடக்கூடிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் இவ்வழிபாட்டுத் தலங்களுக்குப் பெண்கள் ஆடைகள் அணிந்து செல்லும் முறை யும், அவர்களுடைய அலங்காரங்களும் வழிபாட்டுத்தலங்களிலிருந்தே தமிழர் கலாச்சாரம் தொடர்பிலான விழிப்புணர்வு மழுங்கடிக்கப்படுவதற்கு வித்திடுகின்றன.
இந்து ஆலயங்களில் காலங்காலமாக ஆண்கள் மேலாடையின்றி உட்சென்று வழிபாடு செய்ய வேண்டுமென்னும் இந்து மதஞ்சார்ந்த கலாச்சார மரபு உள்ளூர் ஆலயங்களிலுங்கூட மிகப்பெருமளவில் மீறப்பட்டுள்ளது.வருமானம் ஈட்டுவதொன்றையே இலக்காகக்கொண்டு தென்னிந்தியச் சினிமாத்துறையினர் பாரம்பரிய தமிழர் கலாச்சார மரபுகளை எவ்வாறு சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்றார்களோ அதைப்போலவே இந்துமத ஆலய நிர்வாகத்தினரும் வருமானம் பெறு வது ஒன்றை மட்டுமே இலக்காக வைத்துக் காலங்காலமாக இருந்துவந்த இந்துமதஞ்சார்ந்த தமிழர் கலாச்சார விழுமியங்களை ஆலயங்களில் கூடக்காற்றில் பறக்கவிட்டுள்ளார்கள்.

இடையிட்டு அந்நியர் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக்கொண்டவர்கள் வழிவந்த கிறிஸ்தவ மதஞ்சார்ந்த தமிழர்கள் கூடச் செய்யத் தயங்கும் விடயங்களைச்செய்து தமது மேற்கத்தையம் தொடர்பிலான தாழ்வு மனப்பான்மையைப் பூர்த்தி செய்துகொள்கின்றார்கள்.

கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தலங்களில் நம்மவர்கள் மேற்கொள்ளும் ஆட்டம்பாட்டங்களை மேற்கத்தையக் கிறிஸ்தவர்கள் கூடச் செய்யத்தயங்குவர். இதனால் கிறிஸ்தவத்தின் பெயராலும் தமிழர் கலை-கலாச்சார விழுமியங்கள் உருக்குலைக்கப்படுகின்றன என்பதே பொருத்தமானதாகும்.

தொன்மைமிக்க மதம், ஆதிமூலமதம், வரலாறே இல்லாத மதம், முதல் மனிதனும், முதல் மனுஷி யும் கடைப்பிடித்த மதம் எனப்பெருமை பேசும் இந்து மதத்தவர்கள் தமது மதச் சம்பிரதாயங்களை ஆலய வழிபாட்டு நேரங்களிலும் ஏனைய சமயஞ்சார்ந்த கிரியைகளிலும் முழுமையாகக் கைவிட்டுப் பணம் சம்பாதிக்கும் யுக்தி நவீன தென்னிந்தியச் சினி மாத் தயாரிப்பாளர்களின் பணம் சம்பாதிக்கும் யுக்தியைப் போலல்லாது மிகவும் கேவலமானது. ஏனெனில் ஆலய வழிபாடும் இந்து மதஞ்சார்ந்த கிரியைகளும் சினிமாத்துறையோடு ஒப்பிடப்படுமளவுக்கு தரங்குறைந்தனவல்ல. எனவே இந்துமதஞ்சார்ந்த ஆலய வழிபாடும் அம்மதஞ்சார்ந்த கிரியைகளுங்கூட தமிழர் கலாச்சார விழுமியங்களின் தரத்தை மிகவும் வலுவான வீச்சோடு வீழ்ச்சியடையச்செய்கின்றன.

இவ்விடத்தில் தமிழ்பேசும் இஸ்லாமியர் தமது பள்ளிவாசல்களில் இடம்பெறும் வழிபாடுகளில் பயபக்தியோடு இஸ்லாமிய மதஞ்சார்ந்த நெறிகளைக் கடைப்பிடித்துத் தமிழ் பேசுபவர்கள் என்னும் முறையில் தமது வழிபாடு சார்ந்த கலாச்சாரம் பேணும் கண்ணியத்தை இந்து மதஞ்சார்ந்த தமிழர்களும், இடையிட்டுத் தழுவியதனால் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களும் பேணிப்பாதுகாத்துத் தமிழர் கலாச்சாரம் தொடர்பில் விழிப்புணர்வைப் பேணுவார்களாக.

இறுதியாக தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் பெருந் தொகையான பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் ஏனைய ஊடக வெளியீடுகள் ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் வெறும் வியாபார நோக்கமொன்றையே மையமாகவைத்து அந்நோக்கத்தை மட்டுமே வென்றெடுக்கக்கூடியதான ஆக்கங்களை மட்டுமே தொடர்ச்சியாகவும், துரிதமாகவும் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வாக்கங்கள் இளையோரின் உள்ளங்களில் மட்டுல்ல முதியோரின் உள்ளங்களிலும் நச்சு விதைகளைத் தூவிப் பாரம்பரியத் தமிழ் கலை கலாச்சார விழுமியங்களுக்கு நிரந்தரமாகவே சாவு மணி அடிக்கின்றன.
அதுமட்டுல்லாமல் இன்று ஆன்மீகத் தலைவர்களாகவும், அரசி யல் தலைவர்களாகவும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் தமிழர்கள் பலருங்கூட மேற்கூறப்பட்ட துறைகள்சார்ந்த தமி ழர் கலை, கலாச்சார விழுமியங்களுக்கு விரோதமாகத் துணைபோகின்றார்களே யொழிய அவர்களுடைய தமிழர் கலை கலாச்சாரத்தை நாசப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைத்தடுத்து நிறுத்தி தமிழர் கலை, கலாச்சார விழிப்புணர்வின் அவசியத்தை நிலைநிறுத்துவதற்குப் பின்னடிக்கின்றார்கள். எனவே அவர்கள் உடனடியாக இவற்றில் தலையிட்டுத் தடுத்து நிறுத்தித் தமிழர் கலை, கலாச்சாரம் தொடர்பிலான விழிப்புணர்வை நிலைநிறுத்தவேண்டும்.

 

SHARE