தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒர் சிறப்பு மிக்க நிகழ்வாக ஏ9 நெடுஞ்சாலை திறப்பு அமைகிறது-புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லுபவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள்..

552

 

 

 

Posted by Pirabakaran Piraba on Tuesday, April 14, 2015

புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லுபவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள்..

இத்தனை ஆயிரம் மக்கள் மனங்களில் சுமக்கும் இவர்களா உலகம் சொல்லும் தீவிரவாதிகள்..

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒர் சிறப்பு மிக்க நிகழ்வாக ஏ9 நெடுஞ்சாலை திறப்பு அமைகிறது. ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆனையிறவை விடுதலை வீரர்கள் கைப்பற்றிய பின் தமிழரின் ஆளுமை முகமாலை வரை நிறுவப்பட்டது. 2002 அமைதிப்பேச்சு பேச்சுக்களை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த ஏ9 நெடுஞ்சாலை08/03/2002 திறக்கபட்டது.

7 ஆண்டுகள் சிங்கள அடக்குமுறைக்குள் சிக்கித் தவித்த மக்கள் அமைதிப் பேச்சுக்களினூடான 08/03/2002 பாதை திறப்பைத்தொடர்ந்து பெரும் ஆரவாரத்துடன் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் திக்குமுக்காடும் அளவிற்கு 30ஆயிரத்திற்கு மேற்பட்ட யாழ் மக்கள் புலிகளை வரவேற்க வந்தனர். சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்னாள் தங்கள் பாதுகாவலர்களை தோள்களில் சுமந்து மேள தாளங்களுடன் ஆக்கிரமிப்பளர்களுக்கு கையசைத்த படி ஊர்வலமாக சென்றனர். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவாலயத்தில் மக்கள் திரண்டு தங்களின் பாதுகாவலர்கள் புலிகள் என்பதை உலகிற்கு காட்டினர்.

SHARE