தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார்.

423

 

தமிழரசன் அப்துல்காதர்'s photo.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர், பொட்டமான், மாதவன் மாஸ்ரர் என குறிப்பிடும் அளவிற்கு புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புலனாய்வுத்துறையில் மிகத் திறமையான செயற்பாடுகளை உடைய பலரை இனம் கண்டு அவர்களின் ஊடாக, விடுதலைப் புலிகளுக்கான புலனாய்வின் வீச்சை அதிகரித்து, அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர். உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் மாதவன் மாஸ்ரர் அவர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை தனக்கென பதிவுசெய்தவர்.

கடந்த வருடம் வெளியான சிறிலங்கா இனவெறி அரசின் இனவழிப்பு மற்றும் யுத்தக்குற்ற மீறல் தொடர்பான காணொளி காட்சி ஒன்றில் மாதவன் மாஸ்டரின் வித்துடலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தான் நேசித்த மண்ணின் விதையாக வீழ்ந்துள்ள பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் அவர்களால் வளர்க்கப்பட்ட புலனாய்வுத் துறைப் போராளிகள் பலரை முள்ளி வாய்க்காலில் இருந்து கடுமையான முயற்சிகளின் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று களமாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரால் பயிற்ரப்பட்டு சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், அரச நிர்வாகங்களுக்குள்ளும், அதன் படைகளுக்குள்ளும் ஊடுருவி தமது செல்வாக்கைச் செலுத்தி உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர், கடைசி நேர சரணடைவின் போது மிகக் கடுமையான காயங்களுடன் இராணுவத்திடம் சரணடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த போராளிகள் பலரை பாதுகாப்பாக வெளியேற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் இருந்து பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் அவர்களும் பாதுகாப்பாக வெளியேறியிருப்பார் என எண்ணியிருந்த போராளிகளுக்கு இவரின் வீரச்சாவு செய்தி ஏற்க முடியாத ஒன்றாகவே அமையும்.

பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு மாவீரர்களின் இலச்சியக் கனவை வென்றெடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

SHARE