தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள ஆயுதக்குளுக்கள் கொள்கை அற்றவர்கள் பிள்ளையான் சாடல்-சம்பந்தனை சந்தித்தார் பிள்ளையான்! அடுத்து என்ன…??

394

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்தேன் கிழக்கு மாகான ஆட்சி தொடர்பில் அதற்கு அர்த்தம் கூட்டமைப்பில் இணைவது அல்ல என சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானை கூட்டமைப்பின் தலைமை சந்தித்தது சரி, பிழை என்பதல்ல வாதம் கூட்டமைப்பு கிழக்கில் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூறியது என்ன? வெறும் வெற்று வார்த்தைகளா? அரசியலில் இது எல்லாம் என்ன? பாதிக்கப் பட்ட மக்களுக்கு கூறியது எல்லாம் வெற்று வார்த்தைகளா என ஆதங்கப் படும் மக்கள் அடுத்த அரசியல் பிள்ளையான் கருணாவுடன் கூட்டா என்ன ஐயப்படுகின்றனராம் மக்கள்.

ரவுப் ஹக்கீம் மீண்டும் ஒரு முறை தமிழர்களை ஏமாற்றி துரோம் செய்து விட்டார். தமிழ் தலைமைகள் இவரை மாகாண சபை வெற்றியின் பின் ஏற்படுத்திய அரங்கை ஏற்காமல், மகிந்தவுடன் கூத்தடிக்க முஸ்லீம் மக்களை அடகு வைத்த ரவுப் ஹக்கீம் சுயநலத்திற்கு மைத்திரியை ஆதரித்து அமைச்சை பெற்று கிழக்கு மாகாணத்தில் மீண்டும் மகிந்த பங்காளிகளுடன் ஆட்சி அமைப்பது அரசியல் விபச்சாரம், என்பதற்கு தகும். முஸ்லீம் மக்கள் அப்பாவிகள் அவர்களின் வாக்குகளால் விபச்சார அரசியல் செய்யும் இவரும் இவரது சகாக்களும் திருந்துவார்களா?? இல்லை இது தான் வாழ்க்கையா…

அம்பாறை முஸ்லீம்களை முன்னகர விடக் கூடாது என்பதில் ரவுப் ஹக்கீம் குறியாக உள்ளார். அந்த வகையில் அமைச்சுக்களையும் வழங்காது ஏமாற்றினார். முதலமைச்சரையும் ஏமாற்றினார். அஷ்ரப்பின் பின் யாரும் அம்பாறையில் உருவாகக் கூடாது என்பதில் மிக மிக அவதானம் ரவுப் ஹக்கீம் இதை அறியாத மக்கள் பாவம்….

மகிந்த ஆட்சியை விட மைத்திரி ஆட்சியில் ரவுப் ஹக்கீம் கதை, செயல் அனைத்திலும் ஆனவத்தை அவதானிக்க முடிவதுடன் மதிக்கும் மனநிலையிலும் அவர் இல்லை இவருக்கு மகிந்ததான் சரி என பசீர் தனது சகாக்களிடம் கூறியுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.TMVP TNA Meet 1

SHARE