இலங்கையில் நடைபெற்ற 07வது ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் சாணக்கியத்துடன் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறியது வெளிநாடுகளில் வாழுகின்ற அரசியல் தலைவர்கள் நன்றியினைத் தெரிவித்துள்ளனர். ஏற்ற தருணத்தில் பொருத்தமான அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும் தலைவர் இரா.சம்பந்தன். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அவருடைய தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றினைக் கருத்திற்கொண்டு மக்கள் தமிழ்த்தேசியத்தினை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்தார்கள். இதன் காரணமாக வடகிழக்கில் கணிசமானளவு வாக்குகளால் மைத்திரிபால அவர்கள் வெற்றிபெற்றுள்ளார். தமிழ்பேசும மக்களின் ஆணையை உணர்ந்து தமிழ்மக்களுக்கான தீர்வினை குறித்த மைத்திரிபால அரசு வழங்காவிட்டால் இவ்வரசாங்கமும் கவிழ்க்கப்;பட்டு மாற்றுவழியினை ஆரம்பிக்கவேண்டும் என்பதற்கான வழிகளை ஆராய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.