தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை! யாழில் மைத்திரிபால தெரிவிப்பு

375

 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை! யாழில் மைத்திரிபால தெரிவிப்பு (படங்கள்)  3  3  0  0 0  0 மைத்திரியுடன் இரகசிய ஒப்பந்தம் இல்லை; மூவின மக்களின் நன்மை கருதியே முடிவு! – சம்பந்தன் விளக்கம் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையில் மீள்குடியேற்றதை மேற்கொள்வோம்!

– முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மைத்திரியை ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு மீண்டும் துரோகம் செய்கிறது நான் வென்றால் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 4 வருடங்களாக குறைப்பேன்! Related Stories மத்திய அரசின் புத்தாண்டு பரிசு இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா? அதிமுக தேர்தல் அறிக்கை: அணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு ஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு 116 வயது இளைஞரின் அபார சாதனை Other Links Coming up Coming up தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்துகொள்ளவில்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்

. யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நல்லூர் சங்கிலியன் தோப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவடட அமைப்பாளருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் பிற்பகல் 5.00 மணியளவில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போதே மைத்திரிபால மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் – அரசினால் எனக்கெதிராக சேறுபூசும் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. நான் யாருடனும் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொள்ளவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டவர்களே என்னுடன் இணைந்துகொண்டனர். விசேடமாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் நான் செய்துகொள்ளவில்லை. தற்போது ஜனாதிபதி மஹிந்தவிடம் அதிக கோபமும் ஆக்ரோஷமும் காணப்படுவதை அடிக்கடி தொலைக்காட்சிகளில் காணக்கூடியதாகவுள்ளது. இத்தகைய நிலைமையை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஐனாதிபதியிடம் விடுகின்றேன் – என்றார். இன்றைய கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், குமரகுருபரன் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸநாயக்க, விஜயகலா மகேஸ்வரன், ராஜித சேனாரத்தின, ரிஷாத் பதியுதீன் மற்றும் பல ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். –

SHARE