தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமையை மறந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்படுவது ஆபத்தானது.

403

 

8கடந்த சில மாதங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றிலிருந்து விலகி அரசுடன் இணக்கப்பாடான அரசியலில் ஈடுபட்டு வருவதாக வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அஹிம்சை வழியிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், ஆயுதப்போராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பார்கள் என நம்பியே அவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன.

நடைபெற்று முடிந்த நவம்பர் 27 மாவீரர் தினம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனாலும், வடக்கு முதல்வரின் தலைமையிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் மாவீரர் தினத்திற்கு இரு நாட்களுக்கு முன்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பாராளுமன்றில் மாவீரர்கள் தினம் பற்றி உரையாற்றியிருந்தார். அது ஒரு துணிச்சலான நிகழ்வாகும். அதேபோல் மூன்று பேர் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் தமிழ் மக்களுடன் இணைந்து அனுஷ்டித்திருக்கமுடியும்.

உலக மற்றும் இந்தியத் தமிழர்கள், அரசியல்வாதிகள் மாவீரர் தினத்தினை அனுஷ்டித்துவரும் இத்தருணத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகிய நாம் அஞ்சலி செலுத்தாமையானது மக்கள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்று வாயளவில் மாத்திரம் கதைப்பது போதாது. பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் குறிப்பிட்டதைப்போன்று ‘ கோவணம் கட்டினாலும் தமிழன் கொள்கை மாறக்கூடாது” என்பதற்கேற்ப செயற்படவேண்டும். உங்களுடைய குடும்பத்தில் ஒருவர் இறந்திருந்தால் அதனது வலி எவ்வாறு என்பதை உணர முடியும். எதிர்வரும் காலங்களிலாவது எம்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூரும் வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அதிகாரம் மிக்க ஒரு கட்சியாக திகழவேண்டும். இல்லையேல் தமிழ் மக்களினுடைய வரலாறுகள் மறைக்கப்பட்டு சமாதியாக்கப்படும்.

TPN NEWS

SHARE