தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை முன்கொண்டு செல்லுகின்ற கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளருக்கு கூட்டமைப்புத் தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

363

தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்ற போதிலும் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்படுத்திய கருத்துக்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜோன் கெரி, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர்களையும் சந்தித்திருந்தார்.

விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, நைரோபி சென்றிருக்கும் அமெரிக்க வெளியுறுவுச் செயலாளர், இலங்கை விஜயம் பற்றிய தனது உணர்வுகளை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை முன்கொண்டு செல்லுகின்ற கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளருக்கு கூட்டமைப்புத் தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளரின் இந்த விஜயமானது, கடந்த 43 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது உத்தியோபூர்வ விஜயமாக அமைந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கொலின் பவர் , இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதும், அது இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வமான விஜயமாக அமைந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.jone_hery_4jone_hery_3jone_hery_1

SHARE