தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கே.துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா

180

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கே.துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை நியமித்துள்ளது. இவர்கள் இருவரும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தனர்.

durai santhi 7ee

தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவும், தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட க.துரைரெட்ணசிங்கமும் தேசியப் பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் ஓய்வுபெற்ற அதிபராவார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையில் திட்டமிடல் பணிப்பாளராக சேவையாற்றியுள்ளார்.

SHARE