தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் மகிந்த மட்டுமல்ல சரத்பொன்சேகாவும் தான்

514

 

 

தமிழ்மக்களின்   இனப்படுகொலைக்கு  முக்கிய காரணம் மகிந்த மட்டுமல்ல சரத்பொன்சேகாவும் தான்
ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பி.18டிசம்பர் 1950)2005டிசம்பர் 6முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தார் இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி வந்திருக்கிறார்.

இவர் அப்பாவி தமிழ் மக்கள் 20000க்கு மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்கு காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதாபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் அதுதான் உண்மையான விடயமும் கூட இதனால் நவம்பர் 16,2009 அன்று தமது பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

இருதிப்போரின் போது ஜம்பதாயிரம் பேர் வரையான மக்கள் கொல்லப்பட்டதன் சூத்திரதாரிகளும் ஒருவர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முக்கியமான விடயங்களைப் பார்க்கின்றபொழுது ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரைக்கும் பாரியளவில் யுத்த முன்னெடுப்புகளை மேற்கொண்ட சரத்பொன்சேகா பொதுமக்களையும் போரளிகளையும் ஈவிரக்கமின்றி களமுனைகளில் சுட்டுக்கொல்லுமாறு இராணுவத்தினருக்குஉத்தரவி;ட்டார் என்ற இரகசியமான ஆவணங்களும் பதிவாகியுள்ளன.
உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை இந்த இறுதிக்கட்ட கொலை தொடர்பாக சர்வதேச கூண்டில் நிறுத்த முயற்சிப்பது முறைமையற்ற செயலாகவே காணப்படுகின்றது இவரின் போரின் திறமைக்கேற்ப பொன்சேகாவிற்கு முப்படை அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தது இவர் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினைக் கவிழ்ப்பதற் சதிப்புரட்சி செய்தமையினாலையே இந்தியாவின் ரோ அமைப்பு காட்டிக்கொடுத்து மகிந்த ராஜபக்ஷவை மயிரிழையில் தப்புவதற்கு உதவியது.
அப்படி இருந்திருக்காவிட்டால் இன்று மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியேற்பட்டிருக்கும் மட்டுமன்றி அவரது குடும்பத்தினரும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும் அவ்வாறானதொரு சதிப்புரட்சியினால் முன்னால் இராணுவத்தளபதி திட்டங்களைத் தீட்டியிருந்தார் இவருடைய மெய்ப்பாதுகாவலர்கள் விசுவாசம் கொண்ட இராணுவத்தினர் 80பேர் வரையில் இவருடன் சேர்த்து பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர் .
இவரைத் தற்பொழுது மகிந்த அரசாங்கம் விட்டுவைத்ததன் காரணம் என்னவென்றால் ஒரு நாட்டில் விடுதலைப்போரை முடிவுக்கு கொண்டுவந்த ஒரு வீரன் என்ற காரணத்தினால் மாத்திரமே இவரோடு இருந்த இராணுவ வீரர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தபொழுது கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி அவர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் பாகிஸ்தானுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனுடைய உண்மைத்தன்மை நூற்றுக்கு நூறுவீதம் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டதாகவும் இன்னும் பல அதிர்ச்சியான தகவல்களையும் தெரிவித்திருந்தனர் இந்த அடிப்படையில் பார்க்கின்றபொழுது இன்று சரத்பொன்சேகா அவர்கள் சாதாரண மனிதனாக இருப்பதன் காரணமாகவே அவரை உலக அரங்கில் யாரும் கணக்கெடுக்காத அளவிற்கு நிலவரம் தோன்றியுள்ளது.
ஆனால் வன்னிபெருநிலப்பரப்பில் இறுதியாக நடந்த போரில் பெருமளவிலான அழிவிற்கு காரணமானவர் சரத்பொன்சேகா அவர்களே விடுதலைப்புலிகளின் தமிழீழ வைப்பகத்திலிருந்து பல கோடி பெறுமதியான பணத்தை மோசடி செய்துள்ளார் இதே வேளை சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான பலர் இன்னமும் பதவியில் இருக்கின்றனர் எப்பொழுது ஆட்சி மாற்றம் இடம் பெறும்? எப்பொழுது மகிந்தவைக் கவிழ்க்கலாம் அவரை எப்பொழுது சிறையில் அடைக்கலாம் என கங்கணம் கட்டி நிற்கின்றனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் 20 கிலோ மீற்றருக்குள் சுற்றிவளைக்கப்பட்ட போது அவர்களை சரணடைய வைத்து ஒரு சுமுகமான நிலைப்பாட்டை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் முயற்சித்த போது மகிந்த அவர்கள் போரினை நிறுத்தி வைத்தார் ஆனால் சரத்பொன்சேகா அவர்களோ போரை முடிவுக்கு கொணர்ந்து விடுதலைப்புலிகளைஅழித்தேயாக வேண்டும்.

என்ற நோக்குடன் இனச்சுத்திகரிப்பினை மேற்கொண்டார் ஆனால் இன்று ஒன்றும் தெரியாததுபோல் இருப்பது வேடிக்கைக்குரிய விடயம் அதேபோல போரின் போதும் அதன் பிறகும் காணாமல் போனோர் மற்றும் கைது செய்தோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியது கோத்தபாய அவர்களும்தான் .
முகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் அவர் நாட்டின் ஜனாதிபதி ஆவார் முப்படைத் தளபதியாகவிருந்தாலும் அவற்றிற்குத் தலைமை தாங்கும் அதிகாரிகள் என்ன கூறுகிறார்களோ அதனையே செய்ய வேண்டும் மகிந்த ராஜபக்ஷ மனித நேயத்தை ஒரளவு கடைப்பிடித்த பொழுதிலும் சரத்பொன்சேகா அவர்கள் அதனை கடைப்பிடிக்கவில்லை தமிழ்மக்களுக்கு செய்த கொடுமையின் காரணமாகவே அவர் கூண்டுக்குள் அடைபட்டார் என அவர் கைதான போது பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இருக்கும் ஆயுதத்தினைக்கொண்டு போராடச் சொன்னாரே தவிர இரசாயன ஆயுதத்தினைக் கொண்டு போரட்டத்தினை நடாத்தச் சொல்லவில்லை சரத்பொன்சேகா அவர்கள் சீன நாட்டின் உதவியுடன் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து தமிழீழ விடுதலைப்புலிகள் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை நடாத்தியது மட்டுமன்றி தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தி கொலை செய்வதற்கும் காரணமாகவிருந்தார்.
இளநீர் குடித்தவன் யாரோ கோம்பை எடுத்தவன் யாரோ என்ற கதையாய் போய்விட்டது மகிந்த அவர்கள் கோம்பை எடுத்தவர் இளநீர் குடித்தவர் பொன்சேகா அவ்வளவுதான் ஆனால் இன்று சர்வதேச ரீதியாக மகிந்த ராஜபக்ஷ அவர்கள் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் சரத்பொன்சேகாவும் சர்வதேச நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட வேண்டியவரே என்பதை மறந்துவிடலாகாது .
சுரத்பொன்சேகா குற்றவாளியாக கைதாகியபோது அவர் மீது முக்கியமான மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன இராணுவக் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்று முதலில் அரச தரப்பில் கூறப்பட்டது மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் முன் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டார் வன்முறைக்கு பொது மக்களைத் தூண்டியாதக ஒரு வழக்கு பதியப்பட்டது
இராணுவ நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன வெள்ளைக் கொடி விவகாரம் முறையற்ற இராணுவதளபாட கொள்வனவு அத்துடன் இராணுவத்தில் இருந்த போதே அரசியலில் ஈடுபடுவதற்கு முயன்றமை ஆகிய குற்றங்களுக்காக கைதான இவர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் நீண்டகால சிறைவாசம் அனுபவிக்க வேண்டி ஏற்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கைது செய்யப்படுபதற்கு முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போதுதான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக கூறியிருந்தார் எனக்கு தெரிந்தது நான் கேள்விப்பட்டது எனக்கு கூறப்பட்டது ஆகியவைகுறித்து நான் அவசியம் வெளிப்படுத்துவேன் போர் குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் உண்மைகளை சொல்லாதவர்கள் தூரோகிகள் போர் குற்றங்கள் செய்தவர்கள் யாரையும் நான் காப்பாற்ற போவதில்லை என்று தெரிவித்தார் ஜெனரல் சரத்பொன்சேகா சரணடைந்த விடுதலைப்புலிகள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறியதற்காக சிறிலங்கா அரசு தரப்பினால் துரோகி என்று வர்ணிக்கப்படுவது பற்றி பொன்சேகாவிடம் கேட்டபோது உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர் என்று பதிலளித்துள்ளார்.
இந் நிலைப்பாடும் அரசாங்கத்துக்கு இவர் மீதான சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது இறுதிப்போரில் நேரடி உத்தரவுகளை பிறப்பித்து தமிழ்மக்களின் அழிவுக்கு காரணமாயிருந்தவர் இப்படி கூறுவது ஏற்புடையதல்ல இந்நிலைப்பாட்டிலும் இவர் கைதாகி இருக்கலாம் எனப்பட்டது ஆனால் இன்று அவர் ஒரு சுதந்திர அரசியல் செய்யும் அரசியல்வாதியாக உருவெடுத்தார்.
ஆனால் இவர் செய்துள்ள அனைத்துப் போர்க்குற்றங்களும் ஊர்ஜிதப்படுத்தப்படுவதற்கான கூடுதல் ஆதாரங்கள் இருக்கின்ற நிலையில் சனல்4 இதனையும் ஆவணப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை அந்நிலையில் மகிந்தவா, சரத்பொன்சேகாவா? கோத்தபாயவா? யார் சர்வதேசக் கூண்டில் நிற்கப்போகிறார்கள் என்ற உண்மை தெரியவரும் .

mahinda_sarath_3 images images (1) GeneralSarathFonseka fonseka-saventhirasilva fonseka_rajapakse Fonseka a_fonseka-_mahinda_-_gotabhaya

SHARE