தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று முன்னணி நடிகர்கள்!

14

 

தமிழ் சினிமாவின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளாவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது.

மற்ற மொழி திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வந்த நிலையில் கோலிவுட் சார்ப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியான விக்ரம் வசூலை குவித்தது.

அதிக சம்பளம் பெறும் நடிகர்கள்
இதற்கிடையே தற்போது கோலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் டாப் இடத்திற்கு வந்துள்ளார் கமல்.

அதன்படி கமல் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவரின் அடுத்த படத்திற்கான சம்பளம் ரூ. 130 கோடிக்கு உயர்ந்துள்ளது.
தளபதி விஜய் வாரிசு திரைப்படத்திற்காக ரூ. 120 கோடியை சம்பளமும், அவரின் அடுத்த தளபதி 67 படத்திற்காக ரூ. 130 கோடியை சம்பளமாக பெற இருக்கிறாராம்.
ரஜினி அண்ணாத்த திரைப்படத்திற்காக ரூ. 118 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளாராம். ஆனால் அப்படத்தின் தோல்வி காரணமாக அதே தயாரிப்பு நிறுவனத்தில் ரஜினியின் அடுத்த ஜெயிலர் திரைப்படத்திற்காக ரூ. 80 கோடியை சம்பளமாக வாங்க உள்ளாராம்

SHARE