தமிழ் தலைமைத்துவத்தில் பிளவை ஏற்படுத்த டொலர்கள் பயன்படுத்தப்படுகின்றன: மாவை குற்றச்சாட்டு

306

 

இலங்கையின் தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக சில சக்திகள், தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலர்களை விநியோகிக்கின்றன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

tna.jpg3_ ITI-london-Meeting

தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா இந்தக்குற்றச்சாட்டை அண்மையில் திருகோணமலையில் வைத்து சுமத்தினார்.

தமிழர் தலைமைத்துவத்தை மாற்ற நினைக்கும் இந்த சக்திகள், போருக்கு பின்னர் தமிழ் சமூகத்துக்கு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை.

எனினும் தற்போது அந்த சக்திகள், பல்லாயிரம் டொலர்களை செலவழித்து தமிழ் தலைமைத்துவத்தை நிலைக்குலைய செய்ய முயற்சிக்கின்றன.

எனவே தமிழ் மக்கள் இந்த சக்திகளுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

தலைவர்களான செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோருக்கு பின்னர் தமிழ் தலைமைத்துவத்தை சிறப்பாக ஆர்.சம்பந்தன் முன்னெடுத்து வருகிறார் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

SHARE