தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடும். ஆனால் அதற்கு தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பின் தலைவருமே பதில் சொல்ல வேண்டும்.

399

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்காக அதற்கான மாதிரி யாப்பு ஒன்றைத் தயாரித்து தமிழரசுக் கட்சியிடம் வழங்கிவிட்டு தற்போது அவர்களின் முடிவுக்காக காத்திருக்கின்றோம். இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். ‘ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்’ என்ற தொனிப்பொருளில் வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டும். அதுதான் எமது எதிர்பார்ப்பு.


அவ்வாறு நடைபெறுமா என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடும். ஆனால் அதற்கு தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பின் தலைவருமே பதில் சொல்ல வேண்டும். எமது எமது கட்சியாகிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, தமிழர் விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், ஆகிய மூன்று அங்கத்துவ கட்சிகளும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான யாப்பு ஒன்றின் மாதிரியை வடிவமைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியிடம் வழங்கியுள்ளோம். இனி தமிழரசுக் கட்சியே முடிவெடுக்க வேண்டும். அவர்களின் பதிலுக்காக நாம் காத்திருக்கின்றோம்.

SHARE