தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்வது என்பது வரலாற்றுச் சாதனை அதுவே தமிழினத்தை குழிதோன்றிப் புதைப்பதற்கு சமமானது.

662

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்வது என்பது வரலாற்றுச் சாதனை அதுவே தமிழினத்தை குழிதோன்றிப் புதைப்பதற்கு சமமானது.

150328132736_sampanthar_tamilarasu_party_tna_512x288_bbc_nocredit

கடந்த கால போராட்ட வரலாற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளுடன் ஆரம்பமானது. இதன் காரணமாக தமிழ் இனம் எத்தனையோ இன்னல்களை அனுபவித்து வந்துள்ளது. ஆயுத போராட்டம் பரிணாம வளர்ச்சி கண்டு கடந்த முப்பது வருடங்களாக இனத்தின் விடுதலைக்காக தமிழ் இனத்தின் விடுதலைக்காக இறுதிவரை குரல் கொடுத்தனர். இதன் காரணமாக போராட்டங்களில் எத்தனையோ இழப்புக்களை சந்திக்க நேரிட்டது. ஆறவழிப் போராட்டம் என்று தமிழரசுக் கட்சி ஆரம்பித்தாலும் கூட ஒரு போராட்டத்தின் மூலமாக தமிழினத்திற்கு ஒரு விடிவு கிடைக்கும் என்ற இலக்கோடு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் அக்கிய நாடுகள் சபை வரை சென்றது மட்டுமல்லாமல். இன்று சர்வதேசமே தமிழினத்தை உற்றுப்பார்க்கும் அளவிற்கு போராட்டம் வழிந்து நிற்கின்றது. இவ்வாறு இருக்க எதிர் கட்சி ஆசனங்கள் தமிழினத்திற்கு அத்தியவசியமான தேவையொன்றல்ல. அவ்வாறு எதிர்க்கட்சி பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளுமேயானால் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் என்பனவும் குழி தோன்டிப் புதைக்கும் ஒரு நிலவரமே காணப்படும்.
மட்டுமல்லாது தமிழ், சிங்களம், பேகர் இனத்தவர்களும் இந்த எதிர் கட்சியில் அங்கம் வகிப்பார்கள். இதனால் முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றியோ அதற்கு முன் இடம்பெற்ற இனப்படுகொலை பற்றியோ எல்லாம் முடிமறைக்கப்பட்ட நிலையில் எதிர்கட்சியை வழி நடத்திச் செல்லக் கூடிய சூழ்நிலை உருவாகும். தனியே தமிழ் மக்களின் பிரச்சனைகளை மட்டும் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆகவே முஸ்ஸீம், பேகர், சிங்களம் எல்லோருடைய பிரச்சனைகளையும் பார்க்கவேண்டிய சூழ் நிலைக்கு உள்ளாகும். இதன் காரணமாக தொடர்ச்சியாக பாராளுமான்றத்தில் எதிர் கட்சி பதவி வகிக்கப்படுமாயின் அது ஒரு வரலாற்று சாதனையாக இருக்குமே தவிர தமிழ் மக்களுடைய போராட்ட விழுமியங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அல்லது அவர்களின் வழங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன கூட கிடைக்காது போகும். ஓட்டுமொத்தத்தில் தமிழினம் இதுவரை காலமும் போராடிய போராட்டத்திற்கு பதில் கிடைக்காமல் போகும். சித்தித்து செயற்படுவது அவசியமானதொன்று.

SHARE