தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளிடமிருந்து ஓர் அன்பான வேண்டுகோள்!

415

 

ltte1

எமது மக்களுக்காகவும்,எமது தாய்மண்ணுக்காகவும் எமது சுகபோகங்களைத் துறந்து எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் விடுதலைப் படையில் இணைந்து எமது இனத்திற்கென்றொரு தனித்தேசத்தை உருவாக்குவதற்காக எமது உள்ளம்,உயிர்,உடல்,உடமை அனைத்தையும் அர்ப்பணித்து உறுதியோடு இறுதிவரை போராடினோம்.

Tamileela-Thunaip-Padai-4

எமது இந்த விடுதலைப் போராட்டத்திற்கு எம் இனத்தில் பிறந்த ஒருசில நூறு பேரைத்தவிர ஏனைய ஒட்டுமொத்த சமூகத்தினரும் தமது பூரண ஆதரவினை வளங்கி சுமார் மூன்றரை இலட்ச்சத்திற்கும் மேற்பட்ட தமது உயிர்களையும் இந்த விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளார்கள்’ இதனோடு சுமார் நாற்பது ஆயிரம்வரையான போராளிகளும் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள்.

மேலும் எமது தலைவர் அவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் இருந்த அரசியல் சூழ்நிலையே தற்போதைய காலகட்டத்திலும் நிலவிவருகின்றதென்பதனை நாம் நன்கு அவதானிக்க முணுடிகின்றது.

ஆட்சியாளர்களின் உருவம்தான் மாற்றம் பெற்றுள்ளதே அன்றி அவர்களின் அடக்கி ஆழவேண்டும் என்ற கொள்கை மாறவேயில்லை,மாறப்போவதும் இல்லை. விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இப்போதைய எமது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயற்பாடுகளைவிட பன்மடங்கு செயற்திறன்மிக்க எமது அரசியல் தலைவர்கள் இருந்தார்கள் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த விடையம்’ அவர்களால் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாத சூழலிலேயே வட்டுக்கோட்டையில் எமது மக்களைக் கூட்டி ஒரு தீர்மானத்தையும் எடுத்தார்கள்’

அந்த சூழலிலேயே அப்போதைய எமது மூத்த அரசியல்வாதிகளால் சிங்களவரின் எதிர்ப்புக்களையும் மீறி ஒரு பலமான தீர்மானத்தை எடுக்கமுடிந்ததென்றால்,ஏன் இவ்வளவு பெரிய ஆயுதப்போராட்டத்தையும் நாங்கள் நடத்தியும் எவ்வளவோ அழப்பெரிய தியாகங்களை புரிந்தும்,இதனூடாக பெற்ற நூறுவீத மக்கள் பலத்தினை கூட்டமைப்பினராகிய நீங்கள் வைத்திருந்தும் அன்றைய கையறு நிலையில்கூட எமது மூத்த அரசியல்வாதிகள் துணிந்து எடுத்த தீர்மானங்களுக்கு இணையான தீர்மானங்களைக்கூட இன்றைய உங்கள் பலத்தினூடாக எதையும் செய்யமுடியாமல் உள்ளது? என்ன காரணம்?

முள்ளிவாய்க்கால்வரை நாம் எமது தனித்துவத்தை மரணகளத்தில் நின்றுகூட எமது விடுதலை இயக்கமோ,அல்லது எமது மக்களோ அப்பேற்பட்ட இழப்புக்களை சிங்கள அரக்கர்களால் சந்தித்தபொழுதும் நாமாக விரும்பி எமது போராட்டத்தை கைவிடுவதாகவோ,இல்லையேல் சிறிலங்காவின் அடக்கியாளும் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தோ எந்த முடிவுகளையும் எடுக்காத பொழுதும்,எங்களால் நேரடியாக சிறிலங்காவின் பாராளுமன்றத்திற்கு செல்லமுடியாத காரணத்தினாலும்,தமிழர்களின் விடுதலைக்காக என்றுகூறி பல துண்டுகளாக பிழவுபட்டு எந்தவிதமான மக்கள் செல்வாக்குகளுமின்றி பல தசாப்தங்களாக நீங்கள் மிகக் கடுமையாக கஸ்ரப்பட்டும் இறுதியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவர் இருவர் என பலம்பெற்றிருந்த உங்கள் கட்ச்சிகளை எமது தலைவர் அவர்கள் அழைத்து நீங்கள் அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டும் என்றபொழுது அதற்கு நீங்களும் வேறு வளியின்றி சம்மதித்தீர்கள்’

அதன்பின்,எமது தலைவரையும் எமது போராளிகளின் அழப்பெரிய தியாகங்களையும்,அதனூடாக தமக்கு கிடைத்த உலகளாவிய மகா கௌரவத்தையும் பெற்று எமது விடுதலைப்போருக்கு பக்கபலமாக இருந்த எமது மக்களின் செல்வாக்கினை ஒட்டுமொத்தமாக உங்கள்பக்கம் திருப்பி உங்கள் வெற்றிகளூடாக எமது ஆயுதப்போராட்டத்தின் ஞாயப்படுகளை உலகிற்கு பறைசாற்றி அதுநூடாக எமது மக்களுக்கு ஒரு தனித்துவ அரசியல் சாசனத்தை உருவாக்கி,தமிழரும்,சிங்களவருமாக சம பலத்துடனும் சம அந்தஸ்த்துடனும் எவருக்கும் தலைவணங்காமல் வாழவேண்டும் என்பதையே எமது தலைவரும்,மக்களும் ஆழமாக நம்பினார்கள்.

ஆனால் முள்ளிவாய்காலின் பிற்பாடு எங்கள் கனவுகளும்,எமது மக்களின் தியாகங்களும் சிங்கள அரச அரக்கர்களால் அழிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியபொழுது,எமது பலத்தினால் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டிருந்த உங்களால் சிங்களவன் எமது மக்களை அடைத்துவைத்திருந்த எந்தவொரு முகாமுக்கேனும் நீங்கள் உடனடியாக சென்று எமது மக்களுக்கு ஆறுதல்கூற முடிந்ததா?நாம் துன்பப்பட்டபொழுது எம்மை வந்து பார்ப்பதற்குக்கூட துப்பில்லாமலிருந்த உங்களை சிங்களவன் அன்று எம்மை முட்கம்பி வேலிக்குள் அடைத்துவிட்டு,உங்களை உங்கள் சின்னத்துக்குள் அடைத்துவைத்ததை நாம் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல’

எமது பலம் அன்று முள்ளிவாய்காலில் அழிக்கப்பட்டதிலிருந்து, நீங்களும் உங்கள் கூட்டமைப்பும் சேர்ந்து அழிந்ததாகவே எண்ணி அன்று அவரவர் உங்கள்.. உங்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தீர்கள்.ஆனால் நீங்களும் வீட்டுக்குள் சும்மாயும் இருக்கவில்லை, கிணத்துத் தவளைகள்மாதிரி வீட்டுக்குள் இருந்தபடியே எமது மக்களைக்கூட சிங்கள அரசு அவர்களை அடைத்துவைத்திருக்கும் முகாம்களுக்குக்கூட நாம் சென்று பார்க்க விடுகின்றதில்லை என்று உலகத்திலுள்ள புலம்பெயர் தமிழர்களூடாக உலக அரங்கிற்கு செய்தியை அனுப்பிக்கொண்டுதான் இருந்தீர்கள்.

இந்தவேளையில் புலம்பெயர் தமிழர்களும் பாரிய அழுத்தங்களை அவரசர் வாழ்ந்த நாடுகளூடாக சிங்கள அரக்கர்களின் கொடுமைகளை உலகுக்கு தெரிவித்தபொழுதுதான் கூட்டமைப்பினராகிய நீங்கள் உங்கள் வீடுகளைவிட்டு சற்று வெளியில் வந்தீர்கள் என்பது நாம் கண்ட வரலாறு.இதனை தற்பொழுது நீங்கள் மறந்துவிட்டதாகவே எண்ணத்தோன்றுகின்றது’

போர்வெற்றியின் உசிசியிலிருந்த சிகளவர்களின் குதூகலத்தைக்கண்டு நீங்கள் அனைவரும் இனி நாம நம்ம கட்ச்சிக்கு போகவேண்டியதுதான் எண்டு உங்களுக்குள்ளேயே நீங்கள் புலம்பியதும் எங்களுக்கு நன்கு தெரியும்.ஆனால் உங்களை சிங்களவன் ஒதுங்கிப்போக விடவில்லை,போரினில் தோற்கடித்தமாதிரி அரசியலிலும் ஒரு பெரிய தோல்வியினை தமிழர்களின் தலையில் போட்டு இனி வாழ்க்கையில் தமிழன் நாடு, இனம், மொழி, மண் என்று எதுவும் கதைக்காதபடிக்கு சூட்டோடு சூடா 2010ம் ஆண்டு தேர்தலை அறிவித்து உங்கள் தலைகளில் மீழமுடியாத அழவுக்கு பாரிய அரசியல் அடியொன்றுக்கு தயாரானான்.

நீங்களும் பாவங்கள் என்னசெய்வதென்று தெரியாமல் உங்கள் நரைத்த முடிகளை பிசைந்து பிசைந்து நாதியற்று நடுத்தெருவில் நின்றபோது,நாங்கள் நடுக்கடலில் நின்று எக்கரைக்குப்போனால் சுகபோகம் கிடைக்குமென்று சிந்திக்கவில்லை’மாறாக மாறப்போகும் உங்கள் வளமையான கட்சிதாவல்களால் எங்கள் அரசியல் பலம் என்று உறுதியாக சிந்தித்து உங்கள் மாறுதலுக்கு மண்ணரண்போட்டு மதிலாக நின்றோம்.

உங்கள் ஆழ்மனதில் நீங்கள் எங்களை பார்க்கக்கூட போகமுடியவில்லையே,என்னென்று போய் வாக்குக்கேட்பதென்று வருத்தப்பட்டதும் எமக்கும் நன்கு தெரியும்.ஆனால் உங்கள் வீரம் எல்லாம் எங்கள் கைகளில்தான் என்பதும் எமக்குப் புரியும்.அதனால்தான் நாம் அன்று நீறாகிப்போனாலும் ஆறாமல் இருந்த எங்கள் விடுதலை தீயினை வாக்காக போட்டு உங்களை தோற்காமல் காத்தோம்.

அன்று தேர்தல் காலத்தில் உங்கள்.. உங்கள் வீட்டு மதில்களின்மேல் நாய்களின் தலைகளை வெட்டி தொங்கவிட்டு அடுத்த தலை உங்கள்தலைதான் என்ற அர்த்தத்தில் சிங்களவனாலும்,அவன் கைக்கூலிகளாலும் வைக்கப்பட்ட போது,ஆரிடம்போய் வாக்குப்போடுங்கோ என்று கேட்டநிங்கள்?
வீட்டுக்குள் நீங்கள் முடங்கிய நிலையிலேயே உங்களை வாக்குப்போட்டு தூக்கியவர்கள் யார்?

யுத்தத்தில் எம்மை சிங்களவன் பொய்கூறி அழித்தாலும்,ஜதார்த்தத்தில் எம்மோடு அறம் காக்க அவனால் என்றுமே முடியாது,இதை அன்றைய தேர்தல் களம் ஊடாக எமது மக்கள் அறைந்து சொல்லிவிட்டார்கள்.இப்படிப்பட்ட பலமான சூழ்நிலையை இன்றுவரை காப்பவர்கள் எமது விடுதலையின்பால் ஈர்க்கப்பட்ட எமது மக்களே.

நாம் சிங்கள காடேறிகளால் கடித்துக் குதறப்பட்பொழுதிலும்,இன்னும் ஆறாத எமது காயங்களுடனும் நடுத்தெருவில் நிற்கும்பொழுது நீங்கள் எங்களை கண்டுகொள்பவர்களாக தெரியவில்லை’நாடு நாடாக காலுக்குமேல் கால்போட்டு ஆழுக்கொரு கதையும்விட்டு வெந்த புண்ணில் வேல்பாச்சுவதாக உங்கள் கருத்துக்களும் தளைத்தோங்குது,ஈழ அரசியல் வேறு,உலக அரசியல் வேறு என்றும்,ஈழமக்களின் தேவைகள் வேறு,உலகத்தமிழர்களின் தேவைகள் வேறென்றும் கூட்டமைப்பின் சில சட்டத்தரணிகள் பிரித்து பல இடங்களில் மீடியாவுக்கு பேட்டியும் வேற குடுக்கினம்.

இன்று சட்டம் கதைக்கும் சட்டவாளர்கள் அன்று நாங்கள் ஆயுதம் தூக்கி எமது வருங்கால சந்ததிக்காக எமது உயிரை அர்ப்பணித்து போராடியவேளை,எமது நிழலில் நின்று குழிர்காயந்து ஒதுங்கியே தாம் சட்டத்தை படித்தார்கள் என்ற கேவலத்தை மறந்து,எமக்கு சட்டதிட்டங்களைப்பற்றி விழங்கப்படுத்த இவர்களென்ன தியாகிகளா?உங்களைப்போல் இந்த விடுதலையின்பால் மரணித்த எமது சொந்தபந்தங்கள் அன்று நினைத்திருந்தால் இன்று எமக்கு சட்ம் சொல்லும் சட்டம்பிகள் சாக்கடைக்கே சட்டவாளர்களாக இருந்திருப்பர்.

ஆகவே எங்களாலும்,எங்கள் மக்களாலும் பெறப்பட்ட உங்கள் பலத்தினை உங்கள்,உங்கள் தனிப்பட்ட பலமாக எண்ணி கண்டதையும் உங்கள் வாய்களால் உரைத்து,ஈழத்தமிழர்கள் வேறு,உலகத் தமிழர்கள் வேறு என்ற முட்டாள்தனமான உங்கள் கருத்துக்களை எமது மக்கள்மத்தியில் பிரித்து கதைப்பவர்களுக்கும்,இன்னும் புதிய அரசாங்கத்தை சந்தோசப்படுத்துவதற்காக எமது மக்களின் உண்மையான எதிர்பார்ப்பினை மழுங்கடித்து காணிதாறம்,வீடுதாறம்,என்று எமது மக்களுக்கு ஆசைகாட்டி மாற்றுக்கட்சியினர் வளங்கும் உறுதிமொழிகளைப்போல் நீங்களும் வளங்கி,சிங்களவனால் மழுங்கடிக்கப்பட்டுவரும் எமது அரசியல் வீழ்ச்சிக்கான சதிவலையினில் நீங்களும் விழுந்து,எமது மக்களையும் எம்மையும் வீழ்த்துவதற்கு முயற்சிப்பீர்களானால்,
எதிர்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் சர்வதேச பிரயாணங்களின்போது உலகத்தமிழர்கள் முன்னிலையில் உங்கள் ஒவ்வொருவருடைய செயற்பாட்டிற்கமைய அந்த அந்த நாடுகளில் வாழ்கின்ற மக்களால் தகுந்த தண்டனை உங்கள் அனைவருக்கும் பாரபட்ச்சமின்றி வளங்கப்படும்.

அத்தோடு இனிவரும் தேர்தல்களிலும் உங்கள்..உங்கள் பூச்சாண்டிகளிற்கேற்ப மக்களைத்திரட்டி உங்கள் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதோடு,நீங்கள் தேர்தல் காலத்தில் எமது இயக்கப்பாடல்களையும்,எமது மாவீரர்களின் தியாகங்களையும் விற்று மக்களிடமிருந்து வாங்கும் வாக்கினை சரிவர பயன்படுத்தி நடைமுறைப்படுத்தத் தவறுவீர்களானால்,எரிந்துகொண்டிருக்கும் எமது ஒவ்வொருவரினதும் விடுதலைத் தீயினில் நிச்சயம் நீங்கள் குழிக்கவேண்டி வரும் என்பதனையும் மிகவும் கண்டிப்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி,

-சாள்ஸ் அன்ரனி-
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்!

SHARE