தமிழ் முஸ்லீம் உறவை நாங்கள் பலப்படுத்த வேண்டும்: சம்பந்தன்

132
மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக்கின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று மாலை 7.30 மணிக்கு மூதூரில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கருந்து தெரிவித்த இரா.சம்பந்தன்,

இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளார்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரலாக இதில் பங்கேற்றதுடன் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட கூட்டமாக இது அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் முஸ்லீம் உறவை நாங்கள் பலப்படுத்தவேண்டும். அதற்கு நாங்கள் ஒருமித்து செயட்படவேண்டும்

துரதிஷ்டவசமாக எம் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது தேர்தலுக்கான முதற்படிகள் பூர்த்தியடைந்துவிட்டது இதனால் தேசியப்பட்டியலில் கூட உங்களில் ஒருவரை சேர்த்துக்கொள்ள முடியவில்லை.

நாங்கள் ஒருமித்து செயட்படவேண்டும் இந்த முதல் அடியை நாங்கள் தொடரவேண்டும் இதன்மூலமாக
எதிர்காலங்களில் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம் எம் கையில் இருக்கும் என்று, அதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.

SHARE