மஹிந்தவின் பரப்புரைக்கு கருப்பொருள்- சந்திரிக்காவின் “மிஸ்டர் பிரபாகரன்”
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விளிக்கும் போது “மிஸ்டர் பிரபாகரன்” என்று கூறியமை தற்போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
கண்டியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,முன்னொருபோதும் சந்திரிக்கா, மிஸ்டர் பிரபாகரன் என்ற சொல்லை உச்சரித்ததில்லை.
தம்மைக்கூட அவர் மஹிந்த என்றே கூறுவார் என்றும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
தாம் ஆட்சிக்கு வந்ததும் பிரிந்து போயிருந்த நாட்டை ஒன்றுபடுத்தியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் .
இந்தநிலையில் நாட்டை மீண்டும் காட்டிக்கொடுக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.