தரவரிசையில் சங்கக்காராவை பின்னுக்கு தள்ளிய மேத்யூஸ்

159
சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் 860 புள்ளிகளுடன் 5வது இடத்தை பெற்றுள்ளார்.அதே சமயம் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா (851 புள்ளிகள்) 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இலங்கை விக்கெட் கீப்பர் சந்திமால் (646 புள்ளிகள்) 23வது இடத்திலும், திரிமன்னே 4 இடங்கள் முன்னேறி 78வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி (759 புள்ளிகள்) 10வது இடத்தில் இருக்கிறார். முரளிவிஜய் 21வது இடத்திலும், ரஹானே 22வது இடத்திலும் இருக்கின்றனர். புஜாரா 27வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (917 புள்ளிகள்) முதலிடத்திலும், டிவில்லியர்ஸ் (890 புள்ளிகள்), ஸ்டீவன் சுமித் (884 புள்ளிகள்) முறையே 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.

SHARE