தற்கொலை செய்து கொண்ட மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பொலிசாரின் தடையால் பதற்றம்!

145

 

வவுனியா நெலுக்குளம் குகன் நகர் பகுதியை சேர்ந்த பண்டாரிக்குளம் விபுலானந்தா

பாடசாலை உயர்தர மாணவியான குணசேகரன் திவ்வியா பரிட்சைக்கு அனுமதி

கிடைத்தபோதும் பாடசாலை அதிபர் அனுமதி அட்டையை வழங்காத காரணத்தால் 06-08-

2015 அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட குணசேகரன் திவ்வியாவின் இறுதி ஊர்வலம் இன்று 09-08-

2015 வவுனியா நெலுக்குளம் குகன் நகர் பகுதியிலிருந்து ஊர்வலமாக

பண்டாரிக்குளம் விபுலானந்தா பாடசாலை வழியாக எடுத்து வரப்பட்ட போது

வேப்பங்குளம் சந்தியில் திவ்வியாவின் இறுதி ஊர்வலத்தை தடைசெய்த பொலிசாருடன்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் தொடர்ந்து பண்டாரிக்குளம் விபுலானந்தா பாடசாலை

நோக்கி சென்ற வேளை மீண்டும் வேப்பங்குளம் பாலயடிச் சந்தியில் பொலிஸ்

பார ஊர்தியை குறுக்காக நிறுத்தியபொலிசார் திவ்வியாவின் இறுதி ஊர்வலத்தை

தடைசெய்தனர். இதனைத்தொடர்ந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களிடம்

பொலிசார் தாங்கள் நீதிமன்ற அனுமதி பெற்றிருப்பதாகவும் தேவைப்பட்டால்

அனைவரையும் கைதுசெய்வோம் என எச்சரித்ததுடன் அமைதியாக ஊர்வலத்தை தொடர்ந்து

செல்லும்படி அனுமதி வழங்கினர்.

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு

போடப்பட்டிருந்ததுடன் குணசேகரன் திவ்வியாவின் இறுதி ஊர்வலம் பாடசாலையை

வந்தடைந்ததைத் தொடர்ந்து பாடசாலை முன்பாக திவ்வியாவின் பூதவுடலை வைத்து மக்கள்

அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை பொலிசார் அனுமதி வழங்க மறுத்ததன் காரணமாக

அங்குசிறு பதற்ற நிலை காணப்பட்டது.

திவ்வியாவின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அமைதியான மக்கள்

திவ்வியாவின் இறுதி ஊர்வலம் தொடர்ந்து செல்ல அனுமதித்தனர். வவுனியா

புகையிரத வீதி வழியாக கொண்டு செல்லப்பட்ட திவ்வியாவின் பூதவுடல் தச்சன்குளம்

மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

unnamed (24) unnamed (25) unnamed (26) unnamed (27) unnamed (28) unnamed (29)

SHARE