மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள்.
அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண் துணை பிரதமர் ஷெய்லா காப்ஸ். தற்போது இவருக்கு 61 வயதாகிறது.
அண்மையில் அவர் ஒரு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், நான் அரசியலுக்குள் புதுமுகமாக நுழைந்தபோது என்னை கட்சியின் 2 தலைவர்கள் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டனர். இதில் ஒரு சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கான பயணத்தின்போது நிகழ்ந்தது என்று தடாலடியாக போட்டு உடைத்தார்.
அது என்னுடைய 28 ஆவது வயதில் நடந்தது. , என்னை பின்னே தள்ளி என்னை கட்டாயப்படுத்தி முத்தமிட முயன்ற போது, அவரை நான் உதைத்து தள்ளினேன், என அவர் எழுதியுள்ளார்.
மேலும் இதுகுறித்து நான் காவல்துறையில் புகார் செய்யவில்லை, எனது சொந்த தவறாக இதை எண்ணினேன். அடுத்து எனது 30 வயதில் மற்றொரு சம்பவம் நடந்தது
ஷெய்லா காப்ஸ் புகார் கூறிய அந்த 2 பேரும் தற்போது கனடா நாட்டின் எம்.பி.க்களாக உள்ளனர். ஷெய்லாவின் இந்த பேட்டி கனடா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஷெய்லா சார்ந்த கட்சியில் இருந்து அந்த 2 எம்.பி.க்களும் உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.