தலிபான்களின் கொடூர தாக்குதலில் உயிர் தப்பிய மாணவன்

368
பெஷாவர் பள்ளி தாக்குதலில் 9ம் வகுப்பை சேர்ந்த ஒரே ஒரு மாணவன் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான்.பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அப்பள்ளியில் பயின்ற 9ம் வகுப்பைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிம் (Dawood Ibrahim Age-15) என்ற மாணவர் மட்டும் சம்பவ நாளன்று பள்ளிக்குச் செல்லவில்லை.

ஏனெனில் இவர் தாக்குதலின் முந்தைய நாளன்று திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வந்துள்ளார்.

இம்மாணவர் முதல்நாள் இரவு அலாரம் வைத்துவிட்டு படுத்தாலும், இது மறுநாள் காலை ஒலிக்கவில்லை.

இதனால் இவர் நீண்ட நேரம் தூங்கிவிட்டார். எனவே அலாரம் பழுதானதால் இவர் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தனது நெருங்கிய நண்பர்கள் 6 பேரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இப்ராஹிம் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதுகுறித்து இவரது குடும்பத்தினர் கூறுகையில், நண்பர்களின் இறுதிச் சடங்குக்கு சென்றுவந்த பின் இப்ராஹிம் முகத்தில் இதுவரை எந்த உணர்ச்சியையும் காணமுடியவில்லை என கூறியுள்ளனர்.

SHARE