தலிபான் தலைவர் இறக்கவில்லை! உளவுத்துறை தகவல்

402
இறந்ததாக கருதப்பட்ட தலிபான் தலைவர் முல்லா உமர் உயிருடன் இருப்பதாக ஆப்கான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.தலிபான் இயக்க தலைவன் முல்லா உமர் உயிருடன் இருக்கிறாரா? என்ற சந்தேகம் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது.

இந்நிலையில் இவர் பாகிஸ்தானின் கராச்சியில் தான் பதுங்கியுள்ளார் என்பதை எங்களால் உறுதியுடன் கூற முடியும் என ஆப்கான் உளவுத்துறை உயர் அதிகாரி ரகமத்துல்லா நபில் கூறியுள்ளார்.

மேலும் ஆப்கானில் உள்ள தலிபான் அமைப்புகளின் மூன்று பிரிவுகளும் இதே தகவலை தெரிவித்துள்ளன என்றும்  கராச்சி நகரவாசிகளுக்கு முல்லா பதுங்கி இருக்கும் இடமும் நன்றாக தெரியும் எனவும் நபில் தெரிவித்துள்ளார்.

SHARE