தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது

114
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.

தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சடலத்தை தோண்டி எடுக்கும் போது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

SHARE