தாஜூடீன் கொலையுடன் பல முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு?

124
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் பல முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு உண்டு என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
tajudeen-2

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச, முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவித்துள்ளனர்.

கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த சம்பவம் ஒர் விபத்து என பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்தியிருந்தனர். எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் விசாரணைகள் மீள ஆம்பிக்கப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட விபத்து போன்று ஜோடனை செய்யப்பட்டள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் மூடிமறைக்கப்படுவது வழமையானது என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

SHARE